பொது செய்தி

தமிழ்நாடு

தாட்கோ மூலம் தொழிற்பயிற்சி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கடலுார்-தாட்கோ மூலம் தொழிற் பயிற்சி மற்றும் தொழில் கடனுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில், கடலுார் மாவட்டத்தில் 2021- - 22ம் நிதியாண்டிற்கு தாட்கோ துறையின் மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவிகளுக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டு

கடலுார்-தாட்கோ மூலம் தொழிற் பயிற்சி மற்றும் தொழில் கடனுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில், கடலுார் மாவட்டத்தில் 2021- - 22ம் நிதியாண்டிற்கு தாட்கோ துறையின் மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவிகளுக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்படவுள்ளது. தாட்கோவின் www.training.tahdco.com என்ற இணைய தளத்தின் வழியே பதிவேற்றம் செய்து தாங்கள் விரும்பும் பயிற்சியை இத்திட்டத்தின் மூலம் கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து படிகள் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். தாட்கோ மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் சுய தொழில் தொடங்கிட http:application.tahdco.com, அல்லது http:/fast.tahdco.com தாட்கோ இணையதளத்தில் பதிந்து தொழில் முனைவோர் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்பு திட்டத்தில் பயன்பெறலாம். அரசு மானியத்துடன் வங்கி கடன் வழங்க ஆவண செய்யப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X