வத்தலக்குண்டு துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மர் பொருத்தப்படுமா?

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021
Share
Advertisement
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு துணைமின் நிலையத்தில் இருந்து 15 கிராமங்கள் மற்றும் வத்தலக்குண்டு நகருக்கு மின் வினியோகம் ஆகிறது. கடந்த மார்ச் மாதத்தில் துணை மின் நிலையத்தில் உள்ள 10 மெகா வோல்ட் டிரான்ஸ்பார்மர் செயல் இழந்தது. ஐந்து மாதங்களாக கிராமங்களிலும் நகரிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இப்பிரச்னையை அய்யம்பாளையம், நிலக்கோட்டை மின் நிலையங்களில் இருந்து

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு துணைமின் நிலையத்தில் இருந்து 15 கிராமங்கள் மற்றும் வத்தலக்குண்டு நகருக்கு மின் வினியோகம் ஆகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் துணை மின் நிலையத்தில் உள்ள 10 மெகா வோல்ட் டிரான்ஸ்பார்மர் செயல் இழந்தது. ஐந்து மாதங்களாக கிராமங்களிலும் நகரிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இப்பிரச்னையை அய்யம்பாளையம், நிலக்கோட்டை மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை பெற்று சமாளிக்கின்றனர். இருப்பினும் தேவை பூர்த்தியாகவில்லை.

வத்தலக்குண்டு துணை மின் நிலையம் மூலம் 50 ஆயிரம் வீடு, தொழில், விவசாய இணைப்புகள் உள்ளன. அனைத்துத் தரப்பினருக்கும் மின்சாரம் கிடைக்க புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தினால் தான் நிரந்தர தீர்வு கிடைக்கும். மின்வாரிய அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். அய்யம்பாளையம், நிலக்கோட்டையில் மின்சாரம் வாங்குவதால் அந்தப் பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டு வருகிறது. வத்தலக்குண்டு துணை மின் நிலைய பிரச்சினைக்கு தீர்வு காண கலெக்டர் விசாகன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X