தமிழ்நாடு

மகிழ்ச்சி: ்கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறப்பால் வீராணம் ஏரி கிடுகிடு உயர்வு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில்-கல்லணையில் இருந்து கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால், வீராணம் ஏரி ஒரு வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.டெல்டா பகுதி பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதியும், கல்லனையில் ஜூன் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கீழணைக்கு கொள்ளிடம் ஆற்றில்
 மகிழ்ச்சி: ்கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறப்பால் வீராணம் ஏரி கிடுகிடு உயர்வு

காட்டுமன்னார்கோவில்-கல்லணையில் இருந்து கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால், வீராணம் ஏரி ஒரு வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.டெல்டா பகுதி பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதியும், கல்லனையில் ஜூன் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கீழணைக்கு கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட 500 கன அடி தண்ணீர் அணைக்கரை கீழணைக்கு 24ம் தேதி நள்ளிரவு வந்தது.கீழணையில் நீர் மட்டம் 5 அடி உயர்ந்த நிலையில், ஜூலை 27ம் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வடவாற்றில் 46 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

வடவாறு தண்ணீர் வீராணம் ஏரிக்கு அன்று மாலையே வந்தடைந்தது. அப்போது ஏரியின் நீர் மட்டம் ஜூரோ லெவலில் இருந்தது. தஞ்சை மாவட்ட குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறையால் கீழணைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீரை திடீரென பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். இதனால் வீராணம் ஏரி நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அதேசமயத்தில் கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதியில் வீராணம் முழு கொள்ளளவை எட்டியிருந்தது. இந்த ஆண்டு நிரம்பாததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.இந்நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் நேற்று 66.45 அடியாக இருந்த நிலையில் டெல்டா பாசனத்திற்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், வீராணம் ஏரியை நிரப்ப பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்தனர்.அதனால் கடந்த ஒரு வாரமாக கல்லணையில் இருந்து கீழணைக்கு கொள்ளிடம் ஆற்றில் 2,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கீழணையில் 8.5 அடியாக தண்ணீர் மட்டம் உள்ளது. வடவாற்றில் தினமும் சராசரியாக 1,950 கன அடி வீதம் திறக்கப்படுகிறது. வடவாறு மூலம் வீராணம் ஏரிக்கு 1,300 கன அடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது. கடந்த சில நாட்களாக டெல்டா பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வீராணம் ஏரி கடந்த ஒரு வாரத்தில் கிடுகிடுவென தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது.வீராணம் ஏரிக்கு நேற்று தண்ணீர் வரத்து 1,575 கன அடியாக இருந்தது.

ஏரியின் நீர்மட்டம் 45.50 அடியாக உயர்ந்து, 932 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை குடிநீருக்கு 32 கன அடி அனுப்பப்படுகிறது.தற்போது வீராணம் ஏரி கடல் போல் காட்சியளிப்பதால், டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X