பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி கணக்கில் பண மோசடி போலீசார் விழிப்புணர்வு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கடலுார்,-வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொதுமக்களின் வங்கிக் கணக்கிலிருந்து மர்ம நபர்கள் பணத்தை எடுப்பது, ஏ.டி.எம்., மிஷினில் பணம் எடுத்துக் கொடுப்பது போல நடித்து பணத்தை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.இதுபோன்ற மோசடிகளை தடுக்க, சைபர் கிரைம் போலீசார் கடலுார் பஸ்

கடலுார்,-வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொதுமக்களின் வங்கிக் கணக்கிலிருந்து மர்ம நபர்கள் பணத்தை எடுப்பது, ஏ.டி.எம்., மிஷினில் பணம் எடுத்துக் கொடுப்பது போல நடித்து பணத்தை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.இதுபோன்ற மோசடிகளை தடுக்க, சைபர் கிரைம் போலீசார் கடலுார் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது, ஏ.டி.எம்., ரகசிய எண்ணை யாருக்கும் கொடுக்க கூடாது. வங்கியிலிருந்து பேசுகின்றோம் என்று மோசடி அழைப்புகள் வந்தால், அத்தகவலை உடனே சைபர் கிரைம் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். மீறி வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கபட்டால் உடனடியாக 155260 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், யுவராணி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X