மின்கம்பங்களால் விபத்து அபாயம் வாகன ஓட்டிகள் அச்சம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கன்னிவாடி: மெட்டூர்--பலக்கனுாத்து ரோடு விரிவாக்கப் பணியின் போது அப்புறப்படுத்தாத மின்கம்பங்கள் விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றன.கன்னிவாடி -மூலச்சத்திரம் இடையிலான ரோடு விரிவாக்க பணி கடந்தாண்டு துவங்கியது. அகலம் குறுகிய பகுதிகளில் விரிவுபடுத்துதல் மட்டுமின்றி புதிய பாலங்கள், பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கான நடைபாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ரோடு
மின்கம்பங்களால் விபத்து அபாயம்   வாகன ஓட்டிகள் அச்சம்

கன்னிவாடி: மெட்டூர்--பலக்கனுாத்து ரோடு விரிவாக்கப் பணியின் போது அப்புறப்படுத்தாத மின்கம்பங்கள் விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றன.

கன்னிவாடி -மூலச்சத்திரம் இடையிலான ரோடு விரிவாக்க பணி கடந்தாண்டு துவங்கியது. அகலம் குறுகிய பகுதிகளில் விரிவுபடுத்துதல் மட்டுமின்றி புதிய பாலங்கள், பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கான நடைபாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ரோடு விரிவாக்கத்தின் போது பல இடங்களில் மின் கம்பங்கள் அப்புறப்படுத்தவில்லை.

ரோட்டின் நடுவே சிமென்ட் தடுப்புகள் அமைத்துள்ளதால் வாகனங்கள் கடந்து செல்ல முற்படும்போது மின்கம்பங்கள் விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதே போல் கருப்பன்சேர்வைகாரன்பட்டி, பண்ணைபட்டி, திருமலைராயபுரம், எட்டமநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் மின்கம்பங்கள், சாலை இணைப்பு பகுதிகள் விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X