பொது செய்தி

தமிழ்நாடு

ஆப்பிரிக்க கெளுத்தி மீன் வளர்க்க தடை கலெக்டர் எச்சரிக்கை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல்: 'திண்டுக்கல்லில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன் வளர்க்க, விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது'என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: மத்திய, மாநில அரசுகளால் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது, விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள், மற்ற மீன்கள் மற்றும் நீர் வாழ் உயிரினங்களை இரையாக உண்ணும் தன்மை உடையது.
ஆப்பிரிக்க கெளுத்தி மீன் வளர்க்க தடை  கலெக்டர் எச்சரிக்கை

திண்டுக்கல்: 'திண்டுக்கல்லில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன் வளர்க்க, விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது'என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது: மத்திய, மாநில அரசுகளால் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது, விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள், மற்ற மீன்கள் மற்றும் நீர் வாழ் உயிரினங்களை இரையாக உண்ணும் தன்மை உடையது. இவற்றால் நமது பாரம்பரிய மீன்கள், நீர் வாழ் உயிரினங்கள் அழியும் வாய்ப்புள்ளது.

இந்த மீன் இனம், பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் செய்து பல்லாயிரக்கணக்கில் பெருக்க மடையும்.மழை, வெள்ள காலங்களில் இந்த மீன்கள் வளர்ப்பு குளங்களில் இருந்து தப்பி, மற்ற பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழிக்க கூடியது. இதனால் உள்நாட்டு பாரம்பரிய மீன் இனமே இல்லாத நிலை உருவாகும்.

இதனால் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, அரசால் தடைசெய்யப்பட்ட இந்த ரக மீனை வளர்ப்பது, விற்பது குற்றம். இது தொடர்பாக புகார் வந்தால் அந்த மீன்களை முற்றிலும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீன்வளத்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்ட மீன் இனங்களை மட்டுமே வளர்க்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X