பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டிற்கு வராத சூழல் சுற்றுலா மையம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
தாண்டிக்குடி : தாண்டிக்குடி தடியன்குடிசையில் வனத்துறை கட்டடங்கள் சிதிலமடைந்து வருகிறது.இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் காபி வாரியத்தின் மனித வள மேம்பாட்டு மையம்செயல்பட்டு வந்தது. இருபது ஏக்கர் பரப்பில் செயல்பட்டு வந்த மையம் குத்தகை காலம் முடிவுற்ற நிலையில் காபி வாரியம் வனத்துறை வசம் ஒப்படைத்தது. அப்போது குடியிருப்பு, அலுவலகம், கூட்ட அரங்கு, விருந்தினர்
 பயன்பாட்டிற்கு வராத சூழல் சுற்றுலா மையம்

தாண்டிக்குடி : தாண்டிக்குடி தடியன்குடிசையில் வனத்துறை கட்டடங்கள் சிதிலமடைந்து வருகிறது.

இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் காபி வாரியத்தின் மனித வள மேம்பாட்டு மையம்செயல்பட்டு வந்தது. இருபது ஏக்கர் பரப்பில் செயல்பட்டு வந்த மையம் குத்தகை காலம் முடிவுற்ற நிலையில் காபி வாரியம் வனத்துறை வசம் ஒப்படைத்தது.

அப்போது குடியிருப்பு, அலுவலகம், கூட்ட அரங்கு, விருந்தினர் மாளிகை என பல கோடி ரூபாயில் கட்டடங்கள் உருவாக்கப்பட்டன.இதில் இருந்த காபி, மிளகை வனத்துறையே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வருவாய் ஈட்டியது. இங்கு உள்ள கட்டடங்களை பராமரிக்காத நிலையில் சிதிலமடைந்து வருகின்றன.அப்போதைய வனப்பாதுகாவலர் இவ்விடத்தை சூழல் சுற்றுலா மையமாக ஏற்படுத்த திட்டம் வகுத்து அரசுக்கு அறிக்கை அளித்தார்.

சில ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை நடக்கவில்லை. தற்போது இங்கு உள்ள கட்டடங்கள் அனைத்தும் சிதிலமடைந்து வீணாகி வருகின்றன. கட்டடங்களை சீரமைத்து சூழல் சுற்றுலா மையம் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X