பொது செய்தி

இந்தியா

தாஜ்மஹாலை இரவில் ரசிக்க இன்று முதல் மீண்டும் அனுமதி

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஆக்ரா-வரலாற்றுப் புகழ் பெற்ற காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை இரவிலும் ரசிக்க, இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரின் யமுனை நதிக் கரையோரம் அமைந்துள்ளது தாஜ்மஹால். பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள, வரலாற்றுப் புகழ் வாய்ந்த காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹால், இரவு நேரத்தில் நிலவொளியில் மின்னுவது கண்கொள்ளாக்

ஆக்ரா-வரலாற்றுப் புகழ் பெற்ற காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை இரவிலும் ரசிக்க, இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.



latest tamil news


உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரின் யமுனை நதிக் கரையோரம் அமைந்துள்ளது தாஜ்மஹால். பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள, வரலாற்றுப் புகழ் வாய்ந்த காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹால், இரவு நேரத்தில் நிலவொளியில் மின்னுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதை ரசிக்க ஏராளமானோர் வருவர்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச் 17ல் இரவு பார்வையாளர்களுக்கு தாஜ்மஹால் மூடப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல், இரவு நேரத்தில் மூன்று பிரிவு களாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.இது குறித்து, ஆக்ரா தொல்லியல் துறை கண்காணிப்பாளர் வசந்த் குமார் ஸ்வரன்கர் கூறியதாவது:தாஜ்மஹாலை இரவில் ரசிக்க, ஆக., 21, 23, 24 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி


latest tamil news


இரவு 8:30 - 9:00; 9:00 - 9:30; மற்றும் 9:30 - 10:00 மணி வரை என மூன்று பிரிவுகளில் அனுமதி வழங்கப்படும்.ஒவ்வொரு பிரிவிலும், தலா 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதற்கான டிக்கெட்டை ஆக்ரா மால் சாலையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஆக-202112:16:38 IST Report Abuse
குமார் கல்லறைக்கு தேவையில்லாத பில்டப்
Rate this:
Cancel
21-ஆக-202111:07:59 IST Report Abuse
மதுமிதா அழகான சமாதி அமதி யான சமாதியா வரலாறு கள் காற்றில்லாமலே அசைகின்றன. ஒரு சந்தேகம் ஏன் சில சமாதிகளை நீர் சம்மந்தப்பட்ட இடங்களிலேயே (கடற்கரை) அமைக்கிறார்கள்.
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
21-ஆக-202110:00:09 IST Report Abuse
Yezdi K Damo இந்தியாவின் பெருமை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X