பொது செய்தி

இந்தியா

குர்மீத் சிங் பிறந்த நாள் வாழ்த்து தபால் நிலையம் ஸ்தம்பிப்பு..

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சண்டிகர்-பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழ்த்து அட்டைகள் மற்றும் ராக்கி கயிறுகள் அனுப்பியதால் ஹரியானாவில் உள்ள ஹிசார் தபால் பிரிவு ஸ்தம்பித்தது.ஆயுள் தண்டனைராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரை சேர்ந்த குர்மீத்

சண்டிகர்-பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழ்த்து அட்டைகள் மற்றும் ராக்கி கயிறுகள் அனுப்பியதால் ஹரியானாவில் உள்ள ஹிசார் தபால் பிரிவு ஸ்தம்பித்தது.



latest tamil news


ஆயுள் தண்டனைராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரை சேர்ந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் 'தேரா சச்சா சவுதா' என்ற அமைப்பை நடத்தி வந்தார். ஆன்மிக குரு என தன்னை அழைத்துக் கொண்ட இவருக்கு ஏராளமான சீடர்கள் உள்ளனர். சினிமா படங்களிலும் நடித்துள்ள இவர் தன் இரு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் கொலை வழக்கில் 2017ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ஹரியானா மாநிலம் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு கடந்த 15ம் தேதி 54 வயது நிறைவு பெற்றது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சீடர்கள் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி வருகின்றனர். கடந்த 19 நாட்களில் சிதானி கிளை அஞ்சலகத்தில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்த்து அட்டைகள் அனுப்பியுள்ளனர்.ராக்கி கயிறுஅதேபோல் நாளை கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டும் ஏராளமானோர் குர்மீத் சிங்குக்கு ராக்கி கயிறு அனுப்பி வருகின்றனர்.


latest tamil news


இது பற்றி சிதானி அஞ்சலக தலைமை அதிகாரி ரமேஷ் குமார் கூறியதாவது: பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குர்மீத் சிங் சீடர்கள் தினமும் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து அட்டை மற்றும் ராக்கி கயிறு அனுப்பி வருகின்றனர். இவற்றை 'டெலிவரி' செய்ய 850 தபால்காரர்கள் வேலை செய்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையிலும் சிறப்பு டெலிவரி செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
21-ஆக-202112:23:25 IST Report Abuse
Suppan பெண்கள் ராக்கி அனுப்புகிறார்கள். அதாவது என்னை சகோதரியாய் நினை என்பதாக
Rate this:
Cancel
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் தமில் நாட்ல திராவிட கட்டமைப்பின் ஆதரவில் பல போலி‌சாமியார்கள் உருவானார்கள் (ஹிந்து மதம் ஏதோ கெட்டவர்கள் நிறைந்தது என்று திரிக்க) வட‌ இந்தியாவில் இது காங்கிரஸின் கைங்கர்யம் ‌மாக இருக்கும்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-ஆக-202108:39:19 IST Report Abuse
Natarajan Ramanathan பாலியல் வழக்கில் உள்ளே இருக்கிறான்.‌ ராக்கி கயிறு அனுப்பி சகோதரன் என்று ஆக்கிக்கொண்டால் நாளை வெளியே வந்தாலும் பிரச்சினை இருக்கக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X