வீட்டுக்குள் குளிர்ச்சி தரும் மூன்றடுக்கு வெப்ப தடுப்பு முறைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுக்குள் குளிர்ச்சி தரும் மூன்றடுக்கு வெப்ப தடுப்பு முறைகள்

Added : ஆக 21, 2021
Share
மதுரை: பெரும்பாலான கட்டடங்கள் கான்கிரீட்டில் தான் கட்டப்படுகிறது. வெப்பத்தை கிரகித்து வீட்டுக்குள் விடும் தன்மை கான்கிரீட்டுக்கு உண்டு. மின் விசிறி இயக்கும்போது அந்த வெப்பம் வீடு முழுவதும் பரவும். மாடி தரையில் சுண்ணாம்பு, பச்சை வலை, ஈர சாக்கு விரிப்புஎன மூன்றடுக்கு வெப்ப தடுப்பு முறைகள் வீட்டுக்குள் குளிர்ச்சியை கொண்டு வரும்.மாடி தரையில் சுண்ணாம்புவெள்ளை

மதுரை: பெரும்பாலான கட்டடங்கள் கான்கிரீட்டில் தான் கட்டப்படுகிறது. வெப்பத்தை கிரகித்து வீட்டுக்குள் விடும் தன்மை கான்கிரீட்டுக்கு உண்டு. மின் விசிறி இயக்கும்போது அந்த வெப்பம் வீடு முழுவதும் பரவும்.
மாடி தரையில் சுண்ணாம்பு, பச்சை வலை, ஈர சாக்கு விரிப்புஎன மூன்றடுக்கு வெப்ப தடுப்பு முறைகள் வீட்டுக்குள் குளிர்ச்சியை கொண்டு வரும்.மாடி தரையில் சுண்ணாம்புவெள்ளை சுண்ணாம்பை மொட்டை மாடி தரையில் பல கோட்டிங் பூசினால் வெப்பம் வீட்டுக்குள் பரவாது.
வெள்ளை அடித்த மாடி தரை விரைவில் சூடாகாமல் இருப்பதை உணரலாம். இது போல் இரு முறைகளில் சுண்ணாம்பு கலவை பூசலாம். வழக்கமான சுண்ணாம்பு பொடியுடன் ஸ்பெஷல் கலவை கலந்து பல கோட்டிங் அடித்தால் செலவு குறையும். கம்பெனி சுண்ணாம்பு பயன்படுத்தும் போது செலவு கூடுதலாகும்.
ஒவ்வொரு ஆண்டும் இது போல் பூச வேண்டும்.கூல் ரூப் பெயின்ட்கூரை மேல் படியும் வெப்பம் தடுக்க 'கூல் ரூப் பெயின்ட்' கிடைக்கிறது. இதை கூரை, பக்கச் சுவர்களுக்கும் பயன்படுத்தினால் வெயிலின் தாக்கம் குறைக்கலாம். இந்த பிரத்யேக 'கூல் ரூப்' பெயின்ட் இரண்டு ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கும். அதற்கு பின் வெப்பத்தடுப்பு தன்மை குறைந்தால் மீண்டும் ஒரு 'கோட்டிங்' பூச வேண்டும்.பச்சை தடுப்பு வலைகள்கட்டுமான பணி நடக்கும் போது பாதுகாப்பிற்காக பச்சை பிற வலை பயன்படுத்தப்படும்.
இந்த வலை வேண்டிய அளவுகளில் சந்தையில் கிடைக்கும். மாடியில் பந்தல் போன்று பச்சை வலை கட்டி பயன்படுத்தலாம். அதனால் மாடி தரையில் நேரடியாக வெயில் விழாது. சீலிங் வழி வெப்பம் வீட்டுக்குள் பரவாது. வெயில் காலம் முடிந்ததும் பாதுகாப்பாக வைத்து, பயன்படுத்தினால் ஐந்து ஆண்டுகள் உழைக்கும்.தென்னை ஓலை, சாக்குகள்தென்னை ஓலைகளை மாடியில் பரவலாக போட்டு மூடினால் வீட்டுக்குள் வெப்பம் பரவாது.

நான்கு ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும். மழைக்காலங்களில் பாதிக்காமல் இருக்க ஏற்பாடு செய்தால் போதும். சாக்கு பைகளை நீரில் நனைத்து மாடி தரையில் விரித்தால் வெப்பம் வீட்டுக்குள் பரவாது. இம்முறை தற்காலிகம் என்றாலும் அவ்வப்போது தண்ணீரில் நனைக்க வேண்டும். மாடி தளத்தில் சுண்ணாம்பு பூச்சு, பச்சை நிற வலை, ஈர சாக்கு பரப்பி மூன்றடுக்கு வெப்ப தடுப்பு ஏற்படுத்தலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X