பொது செய்தி

தமிழ்நாடு

சொந்த வீட்டு கனவை நிஜமாக்குவது எப்படி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
மதுரை: வாடகை வீட்டில் குடியிருக்கும் அனைவருக்கும் சொந்த வீடு கட்ட அல்லது வாங்கும் என்ற கனவுகள் இருப்பது இயல்பு. ஆனால், வீடு கட்ட தேவையான பணத்தை ஏற்பாடு செய்வது தான் சவாலான விஷயம் தான்.எதிர்பார்க்கும் விலை வரும் வரை காத்திருப்போம் என காத்திருக்காமல் கையில் உள்ள பணத்திற்கு ஏற்ற வீட்டை உடனே வாங்கிவிட வேண்டும். ஏனென்றால், இன்றைய சூழலில் வீட்டின் விலைகள் அதிகரித்து

மதுரை: வாடகை வீட்டில் குடியிருக்கும் அனைவருக்கும் சொந்த வீடு கட்ட அல்லது வாங்கும் என்ற கனவுகள் இருப்பது இயல்பு. ஆனால், வீடு கட்ட தேவையான பணத்தை ஏற்பாடு செய்வது தான் சவாலான விஷயம் தான்.

எதிர்பார்க்கும் விலை வரும் வரை காத்திருப்போம் என காத்திருக்காமல் கையில் உள்ள பணத்திற்கு ஏற்ற வீட்டை உடனே வாங்கிவிட வேண்டும். ஏனென்றால், இன்றைய சூழலில் வீட்டின் விலைகள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. திட்டமிட்டு செயல்பட்டால் சொந்த வீட்டு கனவை எளிதில் நிஜமாக்கலாம்.வீடு வாங்க வங்கிகள் கடன் வழங்கினாலும் வாங்க இயலாத நிலை தான் உள்ளது.

அதற்கு காரணம் என்ன கடன் பெற எளிய வழிகள், ஆலோசகர்கள் குறித்து ஆராய்ந்து அதற்கு பின் வீடு வாங்க, கட்ட முடிவு செய்ய வேண்டும். ஓரிடத்தில் வசித்து பழகினால் அங்கேயே தான் வீடு வாங்க வேண்டும் என நினைப்போம்.ஆனால், அங்கு வீட்டின் விலை நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கும். இதனால் வீடு வாங்க முடியாத நிலை ஏற்படும். நமது பொருளாதாரம் அதிகரித்த பின் வீடு வாங்கலாம் வேகமாக நாம் உழைக்கிறோம்.

அதைவிட அதிகமாக வீட்டின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.வீடு வாங்குவது நமது கனவு என்றால் தாமதிக்காமல் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீட்டை உடனே வாங்க வேண்டும். நாம் குடியிருக்கும் பகுதியிலேயே பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறிய வீட்டை கூட வாங்கலாம். அல்லது சற்று தொலைவில் என்றாலும் பரவாயில்லை நம்மிடம் உள்ள பணத்திற்கு ஏற்ற வீட்டை உடனடியாக வாங்க வேண்டும். கட்டப்பட்டு கொண்டிருக்கும் வீடு என்றால் கூட வாங்கிவிடலாம் அது குடியேற தகுதியாகும் வரை நம் செலவுகளை சமாளிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X