பொது செய்தி

தமிழ்நாடு

வெறும் 1,500 ரூபாய் சம்பளம்: நாதஸ்வர வித்வானுக்கு நடந்த சோகம்..

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
வயதை காரணம் காட்டி, 19 ஆண்டுகள் தற்காலிக பணியில் இருந்த நாதஸ்வர வித்வானுக்கு நிரந்தர பணி வாய்ப்பு தராத விவகாரம், நெல்லையப்பர் கோவிலில் தீயாய் பற்றி எரிகிறது. இது குறித்து, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் நாதஸ்வர வித்வான் சரவணன் கூறியதாவது:கோவிலில், நெல்லையப்பர், காந்திமதி அம்மன் என, இரு சன்னிதிகள் தனித் தனியாக உள்ளன. கடந்த 19 ஆண்டுகளுக்கு முன், காந்திமதி அம்பாள்
நாதஸ்வர வித்வான்,நெல்லையப்பர் கோவில், சோகம்

வயதை காரணம் காட்டி, 19 ஆண்டுகள் தற்காலிக பணியில் இருந்த நாதஸ்வர வித்வானுக்கு நிரந்தர பணி வாய்ப்பு தராத விவகாரம், நெல்லையப்பர் கோவிலில் தீயாய் பற்றி எரிகிறது.

இது குறித்து, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் நாதஸ்வர வித்வான் சரவணன் கூறியதாவது:கோவிலில், நெல்லையப்பர், காந்திமதி அம்மன் என, இரு சன்னிதிகள் தனித் தனியாக உள்ளன. கடந்த 19 ஆண்டுகளுக்கு முன், காந்திமதி அம்பாள் சன்னிதிக்கு நாதஸ்வரம் வாசிப்பதற்காக தற்காலிக பணியாளராக நியமிக்கப்பட்டேன். மாதம் 1,500 ரூபாய் கொடுத்து வந்தனர். டி.வி.எஸ்., நிறுவனம் தான் சம்பளம் வழங்கியது.கோவிலுக்கு, இரு நாதஸ்வர வித்வான்கள் இருக்க வேண்டும். அதனால், சமீபத்தில் இன்னொருவரை நியமிக்க ஆட்கள் தேடினர். நானும் விண்ணப்பம் கொடுத்தேன்.

கோவில் பணியாளராக 35 வயதுக்குள் இருக்க வேண்டும்; எனக்கு 41 வயதாகி விட்டது என காரணம் காட்டி, கோவில் நிர்வாகம் மறுத்து விட்டது. 27 வயதான சுரேஷ் என்பவரை நாதஸ்வர வித்வானாக நியமித்தது. கடந்த 19 ஆண்டு காலமாக சொற்ப வருமானத்தில் பணியாற்றும் என் நியாயமான உணர்வுகளை, அரசு அதிகாரிகள்புரிந்து கொள்ளாதது வருத்தமே.இவ்வாறு அவர் கூறினார்.

'நிர்வாகம் உதவ இயலாது'-

நாதஸ்வர வித்வான் சரவணனுக்கு, அறநிலையத் துறை விதிகள் படி, நிரந்தர பணி வாய்ப்பு வழங்க முடியாது. காரணம், அவர் அதற்கான வயதை கடந்து விட்டார். அவருக்கான நிரந்தர பணி வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், அவர் தொடர்ந்து தற்காலிக பணியாளராக பணியாற்ற தடையில்லை. அவர், டி.வி.எஸ்., நிறுவனம் சார்பில் தற்காலிக பணியாளராக நியமிக்கப்பட்டு சம்பளம் பெற்று வருகிறார். அவருக்கு சம்பளம் சொற்பம் தான். அதனால், டி.வி.எஸ்., நிறுவனம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில், அவரது வருமானத்தை அதிகப்படுத்த சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் அறநிலையத் துறையால் நேரடியாக நியமிக்கப்பட்ட ஊழியர் இல்லை என்பது தான், பிரச்னையே. கோவில் நிர்வாகம் இந்த விஷயத்தில் அவருக்கு உதவ முடியாத நிலையில் உள்ளது. ராம்ராஜ், செயல் அலுவலர், நெல்லையப்பர் கோவில்

வழக்கு தொடர முடிவு!-தற்காலிக பணி உத்தரவு வழங்கியது நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் தான். 19 ஆண்டுகள் கோவிலில் சொற்ப வருமானத்தில் நாதஸ்வரம் வாசித்து வந்த சரவணனுக்கு, நிரந்தர பணி வாய்ப்பை அதிகாரிகள் மறுத்துள்ளனர். அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாட்டை எதிர்த்து, சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கு தயாராகி வருகிறேன்.
வழக்கறிஞர் குற்றாலநாதன், ஹிந்து முன்னணி


latest tamil news


'ஆண்டாள் கோவிலை தொட வேண்டாம்''அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை, ஸ்ரீ வில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் மற்றும் அதன் துணை கோவில்களில் செயல்படுத்த கூடாது' என, கோவில் செயல் அலுவலருக்கு, அனைத்து இந்தியஹிந்து சமுதாய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பு கடிதம் அனுப்பிஉள்ளார்.

ராமசுப்பு கூறியதாவது:ஸ்ரீ வில்லிபுத்துார் ஆண்டாள்நாச்சியார் கோவிலில், காலம் காலமாக அர்ச்சகர் மற்றும் அரையர் சேவை, குறிப்பிட்ட சிலரால், நேம நிஷ்டையுடன், எவ்வித பிரதிபலனும் இல்லாத கைங்கர்யமாக நிறைவேற்றப்படுகிறது. இந்த தேவஸ்தானத்துக்குள் வரும் அனைத்து கோவில்களிலும், மடப்பள்ளியில் சாமிக்கு தளிகை செய்யும் பணியிலும், சம்பந்தமில்லாதவர்களை நியமிப்பது ஏற்படையது அல்ல. அதற்கென அனுபவமும், தியாக உணர்வும் படைத்தவர்கள் காலம் காலமாக செய்து வரும் பணியை, யாரோ ஒருவர் திடீரென செய்ய துவங்கினால், அது தெய்வத்தையே இழிவுபடுத்தும் செயல். இதை அனுமதிக்க முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், அரசியல் சட்டத்தையும் மீறி செயல்பட, தி.மு.க., அரசுக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை. எனவே, ஸ்ரீ வில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் மற்றும் அதன் துணை கோவில்களில் இதை செய்ய விட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் --

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஆக-202119:18:17 IST Report Abuse
Vittal anand rao. முடலமைச்ச்ஜர் கவனம் செலுத்த வேண்டும். ஊதுவொரும் மோளம் அடி போறும் சொந்தமாக நினைத்து உதவ வேண்டும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஆக-202117:04:20 IST Report Abuse
Bhaskaran அரசின் விதிகள் அவங்க தான் மெச்சிக்கணும்
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
21-ஆக-202116:25:55 IST Report Abuse
Rengaraj ஒரு சமூகம் புறக்கணிக்கப்படுகிறது என்றால் அது அந்த சமூகத்தை உள்ளடக்கிய சமுதாயத்துக்கு விடப்படும் ஒரு மறைமுகமான எச்சரிக்கை என்று அர்த்தம். வரதட்சிணை , அந்தஸ்து என்ற போர்வையில் பெண்களை வெறுத்த இந்த சமுதாயம் இன்று திருமணத்துக்கு பெண்கள் கிடைக்காமல் அலைகிறது. கல்வி என்ற போர்வையில் உதாசீன படுத்தப்பட்ட எலெக்ட்ரிசியன் , பிளம்பர், பெயிண்டர் இப்படி சுய தொழில் செய்பவர்களை நல்ல ஒரு ஆள் வேண்டும் என்று நாம் இன்றைக்கு தேடுகிறோம். கலைஞர்களும் அப்படிதான். அரசு அதிகாரம் செய்யும் கோவில்களை விடுங்கள். திருநாட்களில் தனியார் இல்லங்களிலும், அலுவலங்களில் தனியார் கோவில்களிலும் சாஸ்திர விதிகளின் படி பூஜை செய்பவர்களை இப்படி வலை வீசி தேடி இழுக்கும் அளவுக்கு இந்த சமுதாயம் தள்ளப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X