பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் நிலம் அளவீடு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோட்டில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது.இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் அனிதா உத்தரவின் பேரில், வருவாய்த் துறை, போலீசார் ஒத்துழைப்புடன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோட்டில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது.

இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் அனிதா உத்தரவின் பேரில், வருவாய்த் துறை, போலீசார் ஒத்துழைப்புடன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை நேற்று அளவீடு செய்தனர்.

இதற்கான ஏற்பாடு களை மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயில் செயல் அலுவலர் நரசிம்மன், ஆய்வாளர் சந்திரமோகன் செய்தனர். அதிகாரிகள் கூறுகையில்,''அறிக்கையில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிந்தால் ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்'',என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X