பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் வரலட்சுமி விரதம் பெண்கள் சிறப்பு வழிபாடு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் கோயில்கள், வீடுகளில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.சுமங்கலி பெண்கள் தன் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் பெருகவும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். அதன்படி நேற்று பெண்கள் விரதம் இருந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.இதற்காக, வீடுகளில் கோலமிட்டு, வாழை

திண்டுக்கல் : வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் கோயில்கள், வீடுகளில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சுமங்கலி பெண்கள் தன் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் பெருகவும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். அதன்படி நேற்று பெண்கள் விரதம் இருந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.இதற்காக, வீடுகளில் கோலமிட்டு, வாழை இலையில் நெல் பரப்பி, ஒரு தட்டில் அரிசி, அதன் மேல் கலச கும்பத்தை வைத்து அரிசி, தங்கம், ரத்தினம் நிரப்பி, மாவிலைக் கொத்து தேங்காய் வைத்து அலங்கரித்து வழிபாடு நடத்தினர்.

சுமங்கலிகள், பெண்களை அழைத்து லட்சுமி நாமம் படித்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். இதன் பின் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் மற்றும் பிரசாதமாக வழங்கப்பட்டது.சின்னாளபட்டிபாலநாகம்மன் கோயிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.

சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள், பொங்கல் படையலுடன் வழிபாடு நடத்தினர். அதே போல், சமயபுரம் மாரியம்மன், பாரதி நகர் மாரியம்மன், அம்பாத்துறை பத்ரகாளி அம்மன், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X