பொது செய்தி

தமிழ்நாடு

கன்னிவாடியில் அடிப்படை வசதிக்கு ஏங்கும் ஆல்டா பகுதி மக்கள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கன்னிவாடி : கன்னிவாடி அருகே ஆல்டா பகுதியில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே வீடற்ற ஏழைகள் பலர் வசித்தனர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மெட்டூர்- பலக்கனூத்து ரோடு விரிவாக்கத்தின் போது குடிசைகள் அகற்றப்பட்டன. அங்கு வசித்த 32 குடும்பங்களுக்கு 6வது வார்டு ஆல்டா பகுதியில் அரசு புறம்போக்கு நிலம்
 கன்னிவாடியில் அடிப்படை வசதிக்கு  ஏங்கும் ஆல்டா பகுதி மக்கள்

கன்னிவாடி : கன்னிவாடி அருகே ஆல்டா பகுதியில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே வீடற்ற ஏழைகள் பலர் வசித்தனர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மெட்டூர்- பலக்கனூத்து ரோடு விரிவாக்கத்தின் போது குடிசைகள் அகற்றப்பட்டன. அங்கு வசித்த 32 குடும்பங்களுக்கு 6வது வார்டு ஆல்டா பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.

இப்பகுதியில் இரு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது. மெயின் ரோட்டில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ள இப்பகுதிக்கு செல்ல ரோடு வசதியில்லை.கன்னிமார் நீரோடை வழியாக கரடு முரடான பாதைகளை கடந்து செல்கின்றனர். தெருவிளக்கு வசதி இல்லாததால் விஷப் பூச்சிகளால் பாதிக்கின்றனர். பதினான்கு ஆண்டுகளாகியும் நில அளவீடு செய்து பட்டா வழங்கவில்லை.

தெருக்களில் கழிவுநீர், மழைநீர் செல்ல வழியின்றி சுகாதாரக்கேடான சூழலில் வசிக்கின்றனர். இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தைச் சுற்றி தனியார் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றவும் ஏனோ அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர்.இப்பகுதியை சேர்ந்த பொன்ராஜ் கூறுகையில்,''இன்னும் பட்டா வழங்கவில்லை. ரோடு வசதியில்லாததால் மழைக்காலத்தில் நீரோடை வழியாகவும், உடல்நலம் பாதித்தோரை மருத்துவமனை அழைத்து செல்ல சிரமமாக உள்ளது. இப்பகுதியில் பாதை அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும்'',என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X