வடமதுரை : குளத்துார் லட்சுமணபுரம் ரயில்வே 'சப் வே'யில் மழை நீருடன் தேங்கிய சகதியால் 200 மீட்டரில் சென்றடைய வேண்டிய இடத்தை 4 கி.மீ., துாரம் கலெக்டர் விசாகன் சுற்றி வந்தார்.
வடமதுரை ஒன்றியம் குளத்துார் ஊராட்சி லட்சுமணபுரத்தில் இருந்து தாடிக்கொம்பு செல்லும் ரோடு, திண்டுக்கல்- கரூர் ரயில்வே பாதையின் கீழுள்ள 'சப்-வே' வழியே செல்கிறது. இப்பகுதி பள்ளமாகவும், இரு பக்கமும் மேடாகவும், மழை நீர் அதன்போக்கில் வழிந்தோடும் கட்டமைப்பு இல்லாததாலும் சிறிது மழை பெய்தாலும் நீர் நாள் கணக்கில் தேங்குகிறது.
கனரக வாகனங்கள் செல்வதால் அங்குள்ள மண்ணுடன் நீரும் கலந்து சகதி காடாக உள்ளது. நான்கு கி.மீ., வலம் லட்சுமணபுரம் சுரங்கபாதைக்கு அடுத்த சந்தனதேவர் நகரில் அடர் குறுவனம் திட்ட துவக்க விழாவிற்கு கலெக்டர் விசாகன் வந்தார். 'சப்வே' சகதி பிரச்னையால் 200 மீட்டரில் செல்ல வேண்டிய இடத்திற்கு ஆர்.வி.நகர்., ஏரமநாயக்கன்பட்டி, வி.புதுார் வழியே 4 கி.மீ., சுற்றி கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் வந்தன.
இதே சிக்கலை இப்பகுதி பல கிராம மக்கள் பல ஆண்டுகளாக வேதனையுடன் அனுபவிக்கின்றனர்.கலெக்டர் ஆய்வுஅப்பகுதி மக்கள் 'சப்வே' சகதி பிரச்னையை கலெக்டரிடம் தெரிவித்தனர். இதையடுத்து ரயில்பாதைக்கு சென்ற கலெக்டர் 'சப்வே'யில் சேகரமாகும் நீர், சகதி பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இதனால் இங்கு 20 ஆண்டுகளாக நீடிக்கும் சகதி பிரச்னை முடிவுக்கு வரும் என நம்பிக்கையுடன் அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement