இன்று திருவோண கொண்டாட்டம்; சபரிமலையில் இன்று சிறப்பு பூஜை

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
நாகர்கோவில் : கேரளாவில் இன்று திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொரோனா அச்சுறுத்தலுக்கிடையில் கேரளா, கன்னியாகுமரியில் கொண்டாட்டம் களைகட்டுகிறது.ஆவணி மாதம் அஸ்தம் நாளில் ஓணம் கொண்டாட்டம் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு ஆடி அஸ்தத்தில் துவங்கி, இன்று திருவோணம் கொண்டாடப்படுகிறது. மூன்றடி நிலம் தருவதாக விஷ்ணு பகவானுக்கு அளித்த வாக்கை

நாகர்கோவில் : கேரளாவில் இன்று திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொரோனா அச்சுறுத்தலுக்கிடையில் கேரளா, கன்னியாகுமரியில் கொண்டாட்டம் களைகட்டுகிறது.latest tamil news
ஆவணி மாதம் அஸ்தம் நாளில் ஓணம் கொண்டாட்டம் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு ஆடி அஸ்தத்தில் துவங்கி, இன்று திருவோணம் கொண்டாடப்படுகிறது. மூன்றடி நிலம் தருவதாக விஷ்ணு பகவானுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றுவதற்காக, தன் தலையை கொடுத்து மண்ணுக்குள் அமிழ்ந்து போன மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு தினசரி 22 ஆயிரத்தை தாண்டி வரும் நிலையிலும், அரசு தளர்வுகளை அளித்து இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கட்டுப்பாடுகள் இருந்தாலும் மக்கள் அதை எல்லாம் மறந்து பண்டிகையை கொண்டாடுகின்றனர். கடைகளிலும், தெருக்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மலர்களால் அமைக்கப்படும் அத்தப்பூக்களம் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.


latest tamil news
இதற்காக நேற்று தோவாளை மலர் சந்தையில் இருந்து, ஏராளமான மலர்கள் கேரளாவுக்கு ஏற்றுமதியாகின. இதனால், பூ விலை நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதிகமானது. கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் ஓணம் களைகட்டியுள்ளது. இங்கு, இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சபரிமலையில் அய்யப்பன் விக்ரகத்தில் மஞ்சள் துண்டு அணிவிக்கப்பட்டு, இன்று திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், பக்தர்களுக்கு பாயசத்துடன் கூடிய ஓணம் விருந்து அளிக்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
21-ஆக-202115:06:25 IST Report Abuse
SUBBU தர்மத்தை நிலைநாட்ட அவர் எந்த ரூபத்திலும் வருவார்.நன்றி
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
21-ஆக-202110:54:02 IST Report Abuse
SUBBU மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே.மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே கர்ணன் தன்னிடம் யாசகம் கேட்டு வந்தவன் கண்ணன்தான் என அவன் தந்தை சூர்யபகவான் சொல்லியும் கேளாமல் ஏழை வடிவில் வந்த கிருஷ்ணனுக்கு தன் கவச குண்டலங்களை தானமாக அளித்தான். அதே போல் மகாபலி மன்னன் தன் குருநாதர் சுக்ராச்சாரியார் சொன்னதையும் கேட்காமல் மீறி வாமனருக்கு தானம் கொடுக்க கமண்டலத்திலிருந்த தண்ணீரை அவருக்கு நீங்கள் கேட்ட மூன்றடி மண்ணை நான் கொடுக்கிறேன் என சொன்ன போதும் அவனின் குரு சுக்கிராச்சாரி வண்டு வடிவில் வந்து கமண்டலத்தின் துளையை அடைத்த பின்னும் அதை குச்சியால் குத்தி விட்டு அந்த தானத்தை குள்ள அந்தணராக வந்த வாமனருக்கு வழங்கினான் மகாபலி.ஆக நம் பாரதத்தில் தானம் கொடுத்ததால் அழிந்தவர்கள் இரண்டு பேர்.ஒருவன் கர்ணன் இன்னொருவன் மகாபலி சக்கரவர்த்தி.அந்த மகாபலி பகவான் கிருஷ்ணனிடம் நான் திருவோணம் அன்று என்மக்களை நேரில் பார்க்க தாங்கள் எனக்கு வரம் அளிக்க வேண்டும் என்று கேட்ட நாள்தான் இன்றைய திருவோணம் பண்டிகை.கேரள மக்கள் மட்டுமல்ல இந்துக்களாகிய நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய பண்டிகை இந்த ஓணம் திருநாள்.
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
21-ஆக-202110:12:02 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN நமது கேரள மற்றும் மலையாளம் பேசும் சகோதர சகோதரிகளுக்கு ஓணம் நல்வாழ்துகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X