இன்று திருவோண கொண்டாட்டம்; சபரிமலையில் இன்று சிறப்பு பூஜை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இன்று திருவோண கொண்டாட்டம்; சபரிமலையில் இன்று சிறப்பு பூஜை

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (3)
Share
நாகர்கோவில் : கேரளாவில் இன்று திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொரோனா அச்சுறுத்தலுக்கிடையில் கேரளா, கன்னியாகுமரியில் கொண்டாட்டம் களைகட்டுகிறது.ஆவணி மாதம் அஸ்தம் நாளில் ஓணம் கொண்டாட்டம் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு ஆடி அஸ்தத்தில் துவங்கி, இன்று திருவோணம் கொண்டாடப்படுகிறது. மூன்றடி நிலம் தருவதாக விஷ்ணு பகவானுக்கு அளித்த வாக்கை

நாகர்கோவில் : கேரளாவில் இன்று திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொரோனா அச்சுறுத்தலுக்கிடையில் கேரளா, கன்னியாகுமரியில் கொண்டாட்டம் களைகட்டுகிறது.latest tamil news
ஆவணி மாதம் அஸ்தம் நாளில் ஓணம் கொண்டாட்டம் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு ஆடி அஸ்தத்தில் துவங்கி, இன்று திருவோணம் கொண்டாடப்படுகிறது. மூன்றடி நிலம் தருவதாக விஷ்ணு பகவானுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றுவதற்காக, தன் தலையை கொடுத்து மண்ணுக்குள் அமிழ்ந்து போன மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு தினசரி 22 ஆயிரத்தை தாண்டி வரும் நிலையிலும், அரசு தளர்வுகளை அளித்து இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கட்டுப்பாடுகள் இருந்தாலும் மக்கள் அதை எல்லாம் மறந்து பண்டிகையை கொண்டாடுகின்றனர். கடைகளிலும், தெருக்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மலர்களால் அமைக்கப்படும் அத்தப்பூக்களம் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.


latest tamil news
இதற்காக நேற்று தோவாளை மலர் சந்தையில் இருந்து, ஏராளமான மலர்கள் கேரளாவுக்கு ஏற்றுமதியாகின. இதனால், பூ விலை நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதிகமானது. கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் ஓணம் களைகட்டியுள்ளது. இங்கு, இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சபரிமலையில் அய்யப்பன் விக்ரகத்தில் மஞ்சள் துண்டு அணிவிக்கப்பட்டு, இன்று திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், பக்தர்களுக்கு பாயசத்துடன் கூடிய ஓணம் விருந்து அளிக்கப்படுகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X