மேட்டூர் : தி.மு.க. அறிவிப்பை நம்பி மேட்டூர் தாலுகாவில் மூன்று மாதங்களில் கூட்டாக வாழ்ந்த குடும்பத்தினர் 3600 பேர் பிரிந்து தனி குடித்தனம் சென்று விட்டனர்.
சட்டசபை தேர்தலுக்கு முன் 'தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றதால் அத்தொகை கிடைக்கும் என மக்கள் நம்பினர். இதனால் கூட்டுக் குடும்பமாக தந்தை தாய் மகன் மருமகள் என வாழ்ந்த ஏராளமானோர் மூன்று மாதங்களில் தனியாக பிரிந்து விட்டனர். பிரிந்த குடும்பத்தினர் புது ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவில் மட்டும் மூன்று மாதங்களில் 4000க்கும் மேற்பட்டோர் புது கார்டுகளுக்கு விண்ணப்பித்தனர். இதில் தகுதி வாய்ந்த 3600 பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் தாலுகா ரேஷன் கார்டுதாரர் எண்ணிக்கை 1.32 லட்சத்தில் இருந்து ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 600 ஆக உயர்ந்துள்ளது.
அரசு சலுகையை நம்பி திருமணத்துக்கு பின்பும் தாய் தந்தையுடன் வசித்த 3600 பேர் மூன்று மாதங்களில் தனி குடித்தனம் சென்றுள்ளனர். இதனால் ஒரே மகனுக்கு மணம் செய்து அவர்களை தங்களுடன் வைத்திருந்த ஏராளமான பெற்றோர் தனித்து விடப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE