இந்தியர்களுக்கு கனடா கெடுபிடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியர்களுக்கு கனடா 'கெடுபிடி'

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி : கொரோனா பரவலை தடுக்க, கனடா அரசு விதித்துள்ள நிபந்தனையால் அங்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியா - கனடா இடையே நேரடி விமான போக்குவரத்துக்கான தடை, செப்.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்குச் சென்று, அங்கு கொரோனா பரிசோதனை செய்து, பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வரும்

புதுடில்லி : கொரோனா பரவலை தடுக்க, கனடா அரசு விதித்துள்ள நிபந்தனையால் அங்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news


இந்தியா - கனடா இடையே நேரடி விமான போக்குவரத்துக்கான தடை, செப்.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்குச் சென்று, அங்கு கொரோனா பரிசோதனை செய்து, பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வரும் இந்தியர்களை மட்டுமே, கனடா அனுமதிக்கிறது.

இதனால், கனடாவில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, கனடாபல்கலை.,யில் படிக்கும் இந்திய மாணவி லரினா குமார் கூறியதாவது:கனடா அரசின் கடுமையான விதிமுறையால், இந்தியாவில் இருந்து துபாய் சென்று, அங்கிருந்து ஸ்பெயின், மெக்சிகோ சென்று, அதன் பின் தான் கனடா செல்லும் நிலை உள்ளது.


latest tamil news


இதனால், கனடா பயணச் செலவு, 1.50 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்ந்து விட்டது. மேலும், வெளிநாட்டில் இரு நாட்கள் தங்கி கொரோனா சான்றிதழ் வாங்குவது கடும் அலைச்சலாக உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.'இந்த பிரச்னையை, மத்திய அரசு, கனடா அரசிடம் எடுத்துச் செல்ல வேண்டும்' என, பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X