அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமனத்தால் கலாசாரம் சீரழியும்: விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (148)
Advertisement
கோவை : ''அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நடைமுறையால், தமிழகத்தில் கலாசாரமும், பண்பாடும் சீரழியும். அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்,'' என, விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.ஆகம விதிமுறைகளை மீறி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என, தமிழக அரசு பலரையும் கோவில் பூஜை பணிகளுக்கு நியமித்து வருகிறது. இது பக்தர்கள் மத்தியில் கடும் மன வேதனையை
VHP,  Vishva Hindu Parishad, Vedantham, விஷ்வ, ஹிந்து, பரிஷத், கலாச்சாரம், கலாசாரம், நியமனம், அர்ச்சகர்,

கோவை : ''அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நடைமுறையால், தமிழகத்தில் கலாசாரமும், பண்பாடும் சீரழியும். அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்,'' என, விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

ஆகம விதிமுறைகளை மீறி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என, தமிழக அரசு பலரையும் கோவில் பூஜை பணிகளுக்கு நியமித்து வருகிறது. இது பக்தர்கள் மத்தியில் கடும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. புதியதாக கோவில்களில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள், அர்ச்சனையின்போதும், அபிஷேக ஆராதனையின்போதும், பாராயணம் செய்யும் மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களின் உச்சரிப்பு மாறியுள்ளது.

இறைவனுக்கு அதிகாலையில் மேற்கொள்ளும் திரவிய அபிஷேகத்தின்போதும், அணிகலன் மற்றும் ஆடை அணிவிக்கும்போதும் பூக்களை சமர்பித்தல், நைவேத்தியத்தின்போது மந்திரங்கள் மற்றும் சைகை நடைமுறைகள் மாறியுள்ளன. இது ஆகமவிதிகளுக்கும், வேத நடைமுறைகளுக்கும் எதிரானதாக ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.

உதாரணமாக, இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது திரையிட்டு பின்பற்றப்பட வேண்டியவை, திரையில்லாமல் மேற்கொள்ளவேண்டியவை என இரு நடைமுறைகள் உள்ளன. ஆனால், புதியதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள், இரண்டையும் புரிந்து கொள்ளாமல் நடைமுறைக்கு மாறாக செயல்படுத்துகின்றனர். இதனால், பக்தர்கள் முகம்சுளிக்கின்றனர்.

இதேநிலை நீடிக்கும்பட்சத்தில், கோவிலில் இறைசக்தி படிப்படியாக குறையும் என்று ஆகம வல்லுனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


latest tamil newsஇது தெய்வ குற்றம்


விஷ்வ ஹிந்து பரிஷத் (தமிழ்நாடு) நிறுவனத்தலைவர் வேதாந்தம் கூறியதாவது: ஒரு கல்லை செதுக்கி ஆவாஹனம் செய்து, பிரதிஷ்டைக்குபின், வேதமந்திரங்களை பாராயணம் செய்து இறை சக்தி ஏற்படுத்துகின்றனர். அதன்பின், பக்தர்கள் வழிபடுகின்றனர். இறைவனை குறித்து எந்த விஷயத்தையும் முழுமையாக தெரியாதவர்கள், எப்படி இறைவழிபாட்டை நடத்துவர்.

ஹிந்து மதத்துக்கான ஆகம, வேத நடைமுறைகள் 3,000 ஆண்டு பழமையானது. இதுவரை மன்னர் ஆட்சிக்காலத்தில் கூட கோவில் நடைமுறைகள் மாற்றப்படவில்லை. ஏனென்றால், அன்றைய மன்னர்கள் இறைவனை பற்றியும், இறைசக்தியை பற்றியும் நன்கு உணர்ந்திருந்தனர். ஒரு துறை தொடர்புடைய விஷயத்தில், அத்துறையை பற்றி அனுபவமோ, ஆதாரமோ இல்லாதவர்கள் தலையீடு செய்வது தவறு.

ஹிந்து சமய மரபுகளை மீறி, அனைத்து தரப்பினரையும் அர்ச்சகர்களாக்க அதிகாரத்தை கொடுத்தது யார்? இதற்கென்று யாரிடமும் ஆலோசனை எதுவும் பெறாமல் நடைமுறைப்படுத்தியது தவறு. இது தெய்வக்குற்றம். திருமூலர் கூற்றுப்படி, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். தற்போது அதர்மம் மேலோங்கி வருகிறது. தமிழகத்தில் கலாசாரமும், பண்பாடும் சீரழிந்து வருகிறது.

ஜனநாயக நாட்டில் ஆளுக்கொரு சட்டம் இருக்கக் கூடாது. அனைத்து சமூகத்துக்கும் பொதுவான சட்டம் வேண்டும். தமிழக அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு, வேதாந்தம் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (148)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan Santhanam - Bengaluru,இந்தியா
21-ஆக-202121:31:52 IST Report Abuse
Manikandan Santhanam இதோடு அரசு ஆவணங்களில் சாதி பதிவையும் எடுத்த்து விடுங்கள். பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவருக்கு மட்டும் சலுகைகள் கொடுங்கள். சாதி அடிப்படியில் அல்ல
Rate this:
Cancel
VVR Ganesan - Trichy , tamilnadu,இந்தியா
21-ஆக-202121:29:36 IST Report Abuse
VVR Ganesan சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி. இறைவன் படைத்த சாதி இரண்டெனில் இந்த முயற்சி பாராட்டுக்கு உரியது தானே. வாழ்த்துவோம்.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
21-ஆக-202120:42:17 IST Report Abuse
THINAKAREN KARAMANI அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கொள்கையை இந்து கலாச்சாரம், ஆச்சார நியதிகள், மற்றும் ஆகமவிதிகள் பாதிக்காதபடி நடைமுறைப் படுத்த வேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X