அவரின், அற்புத தமிழ் பேச்சை, தி.மு.க.,வினர் யாரும் கேட்கவில்லை போலும். யாருமே வாயைத் திறக்கவில்லையே...| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அவரின், 'அற்புத' தமிழ் பேச்சை, தி.மு.க.,வினர் யாரும் கேட்கவில்லை போலும். யாருமே வாயைத் திறக்கவில்லையே...'

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (25)
Share
அன்டார்டிகாவில் அவரை சாகுபடியும், ஆண்டிப்பட்டியில் ஆப்பிள் சாகுபடியும் எப்படி தவறானதோ, அப்படித்தான் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் தமிழ் பேச்சும் தவறாக இருக்கிறது.-அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் 'அவரின், 'அற்புத' தமிழ் பேச்சை, தி.மு.க.,வினர் யாரும் கேட்கவில்லை போலும். யாருமே வாயைத் திறக்கவில்லையே...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள்
பேச்சுபேட்டிஅறிக்கை,அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், வைகைசெல்வன்,
தமிழக பா.ஜ., பொதுச்செயலர், கே.டி.ராகவன்,
தி.மு.க., செய்திதொடர்பாளர், கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,
பா.ஜ.,  சுப்ரமணியசாமி, மார்க்சிஸ்ட், அருணன்

அன்டார்டிகாவில் அவரை சாகுபடியும், ஆண்டிப்பட்டியில் ஆப்பிள் சாகுபடியும் எப்படி தவறானதோ, அப்படித்தான் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் தமிழ் பேச்சும் தவறாக இருக்கிறது.-அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்


'அவரின், 'அற்புத' தமிழ் பேச்சை, தி.மு.க.,வினர் யாரும் கேட்கவில்லை போலும். யாருமே வாயைத் திறக்கவில்லையே...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அறிக்கை



புதிய அர்ச்சகர்களுக்கு பணி வழங்குகிறேன் என்று கூறி, ஏற்கனவே இருக்கும் அர்ச்சகர்களை எந்த காரணமும் இன்றி நீக்குவது கண்டிக்கத்தக்கது.-தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கே.டி.ராகவன்


'பதவியில் இருக்கும் அர்ச்சகர்களை எங்கும் நீக்கவில்லை; கூடுதலாகத் தான் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளதே...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கே.டி.ராகவன் அறிக்கை



நம் மக்களுக்கு ஒரு குணமுண்டு. உதவிகளை பெற்றுக்கொண்டே, நம்மை விட தகுதியானவர், திறமைசாலி இருந்தால், அவருக்கு உரிய இடம் கிடைக்காவிட்டால் அதில் அற்ப சந்தோஷம் அடைவர்-தி.மு.க., செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்


'தி.மு.க.,வில் சேர்ந்து நீண்ட காலம் ஆன பிறகும் மேலிடம் உங்களை கண்டுகொள்ளவில்லை என்ற கோபம் தென்படுகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை



நம் நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, 25 ரூபாய் உயர்ந்துள்ளது. ஆனால், ஆப்கன் நாட்டை தலிபான்கள் பிடித்ததால், அந்நாட்டு பெண்களுக்கு கஷ்டம் என்கின்றனர். எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மூலம் நம் நாட்டு பெண்களுக்கு ஏன் இந்த தண்டனை?-மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்


latest tamil news



'தலிபான்கள் அப்படியே பாக்., வந்து, காஷ்மீருக்குள் நுழைந்து, பஞ்சாப், டில்லி போன்ற நகரங்களுக்குள் பயங்கரவாதிகளை அனுப்பி மீண்டும் ரணகளம் ஆக்கி விடுவரோ என்ற அச்சம் தான் காரணம்...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை



கடந்த 2013ம் ஆண்டு முதல், சீனாவுடன் ஒப்பிடும் போது, நம் நாடு பலவீனமாகவே உள்ளது. இந்நிலையில், தலிபான்களுடனும் பலவீனமாக உள்ளது. இது, நம் தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசத்திற்கு ஆபத்தானவை.-பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி


'இப்படி உள்ளிருந்தே அறுக்கும் நபர்கள் இருக்கும் வரை, நம் நாடு பலவீனமாகத் தான் இருக்கும்...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X