காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (3)
Share
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததை அறிந்த, போலீசார் மற்றும் ராணுவத்தினர் அங்கு விரைந்தனர். அப்போது இரு தரப்புக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. அதில்
kashmir, terrorist, encounter, jaish, killed, காஷ்மீர், பயங்கரவாதிகள், என்கவுன்டர், சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததை அறிந்த, போலீசார் மற்றும் ராணுவத்தினர் அங்கு விரைந்தனர். அப்போது இரு தரப்புக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. அதில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் வகீல்ஷா என்பதும் இவன், பா.ஜ., வை சேர்ந்த ராகேஷ் பண்டிட்டாவை கொலை செய்தவன் எனவும் தெரியவந்துள்ளது.


latest tamil news



நேற்று(ஆக.,20), ஸ்ரீநகர் அருகே, க்ரு பகுதியில், பொது மக்கள் சிலரை கொன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். நேற்று முன்தினம், ரஜோரி மாவட்டத்தில் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X