சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் பலி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே, மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் இறந்தனர்.திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே சொத்தமலையைச் சேர்ந்தவர் சென்னையன், 60. விவசாயி. அவர் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஹரி, 14. பச்சூர் பழையபேட்டையை சேர்ந்த கனகன், 56, மளிகை வியாபாரி. அவர் மகன் எட்டாம் வகுப்பு படிக்கும் தனுஷ்ராஜ், 13.கொரோனா விடுமுறையால் இவர்கள் இருவரும் நாட்றம்பள்ளி

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே, மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் இறந்தனர்.திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே சொத்தமலையைச் சேர்ந்தவர் சென்னையன், 60. விவசாயி. அவர் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஹரி, 14. பச்சூர் பழையபேட்டையை சேர்ந்த கனகன், 56, மளிகை வியாபாரி. அவர் மகன் எட்டாம் வகுப்பு படிக்கும் தனுஷ்ராஜ், 13.

கொரோனா விடுமுறையால் இவர்கள் இருவரும் நாட்றம்பள்ளி அருகே செட்டேரி டேம் அருகே ரயில்வே ரோடு ஓரமாக உள்ள காப்புக்காட்டில் நேற்று மாலை 5:00 மணிக்கு ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த குட்டையில் இருவரும் இறங்கி குளித்தனர். அப்போது அவர்கள் அலறினர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 11:30 மணிக்கு இருவரும் இறந்தனர்.
நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், குனிச்சியூரைச் சேர்ந்த பார்த்திபன், 35, என்பவர் அப்பகுதியில் குட்டை அமைத்து முறைகேடாக செயற்கை மணல் தயாரித்து வந்துள்ளார். இதற்காக அருகில் இருந்த மின் கம்பத்தில் கொக்கி போட்டு திருட்டுத்தனமாக மின்சாரத்தை திருடி வந்துள்ளார்.
சம்பவத்தன்று மின் கம்பி அறுந்து குட்டைக்குள் விழுந்ததில் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. இது தெரியாமல் சிறுவர்கள் குளித்த போது மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. பார்த்திபனை கைது செய்யக் கோரி இறந்த சிறுவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்றம்பள்ளி போலீசார் பார்த்திபனை கைது செய்து செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X