காங்., ஓர் உடைந்த ஊன்றுகோல்; அதை யாரும் பயன்படுத்த மாட்டார்கள்: பா.ஜ., விமர்சனம்

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: '‛காங்கிரஸ் கட்சி உடைந்த ஊன்றுகோல் போன்றது. அதைப் பயன்படுத்த யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். காங்கிரசின் எதிர்காலம் இருண்டு விட்டது,'' என, பா.ஜ.,வின் தலைமை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்தினார். இந்த விவகாரத்தில்

புதுடில்லி: '‛காங்கிரஸ் கட்சி உடைந்த ஊன்றுகோல் போன்றது. அதைப் பயன்படுத்த யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். காங்கிரசின் எதிர்காலம் இருண்டு விட்டது,'' என, பா.ஜ.,வின் தலைமை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



latest tamil news



பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்தினார். இந்த விவகாரத்தில் காங்கிரசை பா.ஜ., குறை கூறியது.
இதுதொடர்பாக, பா.ஜ.,வின் தலைமை செய்தி தொடர்பாளர் அனில் பலூனி தெரிவித்து உள்ளதாவது:


latest tamil news



காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்து விட்டனர். அதன் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர். காங்கிரசுக்கும் தன்மீது நம்பிக்கை இல்லாததால், கூட்டணி தேடுவதுதான் நல்லது.
காங்கிரஸ் கட்சி உடைந்த ஊன்றுகோல் போன்றது. அதைப் பயன்படுத்த இப்போது யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அந்தக் கட்சியினர் எவ்வளவு முயன்றாலும் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை; ஏற்படாது. காங்கிரசின் எதிர்காலம் இருண்டு விட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
24-ஆக-202103:30:54 IST Report Abuse
meenakshisundaram உண்மைதான் .உடைந்த ஊன்று கோல் இருப்பது மிக ஆபத்தானது .ஏனென்றால் அது இருக்கிறது என்ற நம்பிகையில் மனிதர்கள் மெத்தனமாக இருந்து விடுவார்கள் .ஆனால் அந்த இடத்தில ஊன்று கோலே இல்லாமல் இருப்பதுவே உஷார் ஆக இருக்க உதவும்.
Rate this:
Cancel
21-ஆக-202121:14:20 IST Report Abuse
அப்புசாமி காங்கிரஸ் உடைஞ்சு போன ஊன்றுகோல்தான். தங்களுடைய கையாலாகாத்தனத்துக்கு காங்கிரசை ஊன்றுகோலா பயன்படுத்துறது, காரணமா சொல்றது.... தாங்க முடியலைடா கண்ணா...
Rate this:
Cancel
Ramanathan Subburathinam - Chennai ,இந்தியா
21-ஆக-202115:05:04 IST Report Abuse
Ramanathan Subburathinam Rotating wheel which is upward now have to touch the earth. Please do not forget this principle in your life.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X