காங்., ஓர் உடைந்த ஊன்றுகோல்; அதை யாரும் பயன்படுத்த மாட்டார்கள்: பா.ஜ., விமர்சனம்| Dinamalar

காங்., ஓர் உடைந்த ஊன்றுகோல்; அதை யாரும் பயன்படுத்த மாட்டார்கள்: பா.ஜ., விமர்சனம்

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (20)
Share
புதுடில்லி: '‛காங்கிரஸ் கட்சி உடைந்த ஊன்றுகோல் போன்றது. அதைப் பயன்படுத்த யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். காங்கிரசின் எதிர்காலம் இருண்டு விட்டது,'' என, பா.ஜ.,வின் தலைமை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்தினார். இந்த விவகாரத்தில்

புதுடில்லி: '‛காங்கிரஸ் கட்சி உடைந்த ஊன்றுகோல் போன்றது. அதைப் பயன்படுத்த யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். காங்கிரசின் எதிர்காலம் இருண்டு விட்டது,'' என, பா.ஜ.,வின் தலைமை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



latest tamil news



பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்தினார். இந்த விவகாரத்தில் காங்கிரசை பா.ஜ., குறை கூறியது.
இதுதொடர்பாக, பா.ஜ.,வின் தலைமை செய்தி தொடர்பாளர் அனில் பலூனி தெரிவித்து உள்ளதாவது:


latest tamil news



காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்து விட்டனர். அதன் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர். காங்கிரசுக்கும் தன்மீது நம்பிக்கை இல்லாததால், கூட்டணி தேடுவதுதான் நல்லது.
காங்கிரஸ் கட்சி உடைந்த ஊன்றுகோல் போன்றது. அதைப் பயன்படுத்த இப்போது யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அந்தக் கட்சியினர் எவ்வளவு முயன்றாலும் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை; ஏற்படாது. காங்கிரசின் எதிர்காலம் இருண்டு விட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X