பொது செய்தி

இந்தியா

டில்லியில் கனமழையால் போக்குவரத்து நெரிசல்: வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021
Share
Advertisement
புதுடில்லி: தலைநகர் டில்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் இன்று காலை வரை கன மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.புல் பிரஹலாதர் சுரங்கபாலம், காசியாபாத்தின் கவுசாலா சுரங்க பாலமும் தண்ணீரில் மூழ்கின. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துவாராகா - பாலம் மேம்பாலம், எய்ம்ஸ் செல்லும் மேம்பாலம் பகுதிகளில் அதிகளவு
டில்லி, மழை, வானிலைமையம், எச்சரிக்கை

புதுடில்லி: தலைநகர் டில்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் இன்று காலை வரை கன மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

புல் பிரஹலாதர் சுரங்கபாலம், காசியாபாத்தின் கவுசாலா சுரங்க பாலமும் தண்ணீரில் மூழ்கின. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துவாராகா - பாலம் மேம்பாலம், எய்ம்ஸ் செல்லும் மேம்பாலம் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியது. ஐடிஓ பகுதியிலும் தண்ணீர் தேங்கியது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதசாரிகளும் சாலைகளை கடக்க கடும் சிக்கலை சந்தித்தனர்.


latest tamil news




அந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசார், நெரிசலை சமாளிக்கும் பணியில் ஈடுபட்டனர். ராஜ்காட் பகுதியிலும் மழை நீர் தேங்கியது. மண்டி ஹவுஸ் பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதனை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


latest tamil news




தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால், பல இடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.



வானிலை மையம் எச்சரிக்கை


இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டில்லிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. டில்லியின் பல இடங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சப்தர்ஜங் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 138.8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த சீசனில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X