பொது செய்தி

தமிழ்நாடு

உரிய ஆவணமின்றி வைத்திருந்த 150 டம்மி துப்பாக்கிகள் பறிமுதல்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சென்னை: உரிய ஆவணமின்றி வீட்டில் வைக்கப்பட்டிருந்த 150 டம்மி துப்பாக்கிகளை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.சென்னை கோயம்பேடு பகுதியில் இரு வாரங்களுக்கு முன் நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' சினிமா படப்பிடிப்புக்காக கொண்டு செல்லப்பட்ட 2 ஏ.கே.47 ரக டம்மித் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட டம்மி துப்பாக்கி மாம்பலம்
உரிய ஆவணமின்றி வைத்திருந்த 150 டம்மி துப்பாக்கிகள் பறிமுதல்

சென்னை: உரிய ஆவணமின்றி வீட்டில் வைக்கப்பட்டிருந்த 150 டம்மி துப்பாக்கிகளை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.

சென்னை கோயம்பேடு பகுதியில் இரு வாரங்களுக்கு முன் நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' சினிமா படப்பிடிப்புக்காக கொண்டு செல்லப்பட்ட 2 ஏ.கே.47 ரக டம்மித் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட டம்மி துப்பாக்கி மாம்பலம் வைத்தியநாதன் தெருவில் உள்ள கே.எஸ்.ஆர்.சினி ஆக் ஷன் ஸ்பெஷல் எபக்ட்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து எடுத்து வந்தது தெரியவந்தது.

நேற்று அந்நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ் வீட்டில் ஆய்வு செய்தபோது 150 டம்மி துப்பாக்கிகள் உரிய ஆவணமின்றி வைத்திருந்தது தெரியவந்தது.துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் வெளியூரில் உள்ள செல்வராஜை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X