காபூல்: ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே சொந்த நாட்டிற்கு திரும்ப காத்திருந்த 150 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் எனவும் அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு, கடத்தப்பட்டவர்கள் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் மீட்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது.
ஆப்கானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு பயந்து, அங்கிருந்து ஏராளமான வெளிநாட்டினர், தாயகம் திரும்பி வருகின்றனர். அவர்களை சம்பந்தப்பட்ட நாடுகள் விமானங்களை அனுப்பி அழைத்து வருகின்றனர். பலர் விமான நிலையம் அருகே காத்திருக்கின்றனர். பாதுகாப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் எனவும், அந்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஆனால், இது குறித்து உறுதியான தகவல் இல்லை. இந்தியர்கள் கடத்தலை உறுதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிர முயற்சி செய்து வருகிறது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், கடத்தப்பட்டதாக கூறப்படுபவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. நலமுடன் உள்ளனர். அவர்களை, விசாரணைக்காக போலீஸ் ஸ்டேசன் அழைத்து செல்லப்பட்டனர். விசாரித்த பின்னர் அவர்களை விட்டுவிட்டனர். தற்போது 150 பேரும் விமான நிலையதத்தில் உள்ளனர். இந்தியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என தெரிவித்தன.

ஆனால், தலிபான்களின் செய்தி தொடர்பாளர் அகமதுல்லா வாஸிக், 150 பேரை கடத்தப்பட்ட தகவலை மறுத்துள்ளார். காபூலில் உள்ள ‛தி நியூயார்க் டைம்ஸ்' நிருபருக்கு அளித்த பேட்டியில் இதனை அகமதுல்லா தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE