தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து: அசாமில் 14 பேர் கைது

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
கவுகாத்தி: அசாமில், தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் காம்ரூப், பர்பேடா, துப்ரி மற்றும் கரீம்கஞ்ச் பகுதியைாச் சேர்ந்த தலா இருவரும், தர்ரங், சச்சர், ஹைலாகண்ட், சல்மாரா, கோவல்பரா மற்றும் ஹோஜாய் மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவார்கள்.இது தொடர்பாக அசாம் மாநில சிறப்பு
TALIBAN, ASSAM, ARREST, SOCIALWEBSITES, SOCIALMEDIA, தலிபான், சமூகவலைதளம், அசாம்,கைது, போலீசார், போலீஸ், எச்சரிக்கை

கவுகாத்தி: அசாமில், தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் காம்ரூப், பர்பேடா, துப்ரி மற்றும் கரீம்கஞ்ச் பகுதியைாச் சேர்ந்த தலா இருவரும், தர்ரங், சச்சர், ஹைலாகண்ட், சல்மாரா, கோவல்பரா மற்றும் ஹோஜாய் மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவார்கள்.

இது தொடர்பாக அசாம் மாநில சிறப்பு டி.ஜி.பி., சிபி சிங் கூறுகையில், தலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 14 பேரை கைது செய்துள்ளோம். நேற்று இரவு முதல் இந்த கைது நடவடிக்கை துவங்கியது. சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுதல் மற்றும் பகிரும் போது, பயனாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.


latest tamil news


தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து பதிவிடுவது சட்டவிரோதம். இதனால், தேச நலன் பாதிக்கப்படும் என்பதால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
22-ஆக-202107:34:57 IST Report Abuse
elakkumanan எல்லாம் சரி சார். அப்போ, டுமீல் நாட்டில் மட்டும் இந்த தாலிபான்களுக்கு ஆதரவாக கருத்து பதிவிடும் பெயரில்லா அன்பர்களை ஒன்னியும் செய்யலையா? கைது பண்ண வேண்டாம்...அந்த பெயரில்லா அபலைகளை, அவர்களது குடும்பத்துடன், ஆப்கானில் இறக்கிவிட்டு விடுங்கள்...அது போதும் எங்களுக்கு....டுமீல் நாடு, சுத்தமாகும்...மத்திய அரசு ஒர வஞ்சனையுடன் செயல்படுகிறது..
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஆக-202122:52:47 IST Report Abuse
தமிழவேல் போரிஸ், ஸ்புட்டின், ஷி ஜின்பிங் எல்லாரும் ஆதரவு தர்றாங்களே. அவங்கள...................
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஆக-202122:52:25 IST Report Abuse
தமிழவேல் செய்தியில் உள்ளது போல, தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து பதிவிடுவது சட்டவிரோதமாகாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X