பொது செய்தி

தமிழ்நாடு

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்த்தவருக்கு அபராதம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் அருகே, தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வளர்த்தவருக்கு அபராதம் விதித்தனர்.வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த பனமடங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 50. இவர் அங்குள்ள நீர் வரத்துக் கால்வாயில், தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து வருவதாக தகவல் கிடைத்தது.வேலுார் மாவட்ட மீனவர் நலத்துறை உதவி
ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்த்தவருக்கு அபராதம்

வேலுார்: வேலுார் அருகே, தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வளர்த்தவருக்கு அபராதம் விதித்தனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த பனமடங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 50. இவர் அங்குள்ள நீர் வரத்துக் கால்வாயில், தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து வருவதாக தகவல் கிடைத்தது.
வேலுார் மாவட்ட மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் தலைமையில் அதிகாரிகள் கடந்த 19 ம் தேதி மாலை அங்கு சென்று ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 கெளுத்தி மீன்களை பறிமுதல் செய்து பூமியில் புதைத்து அழித்தனர்.
மீனவர் நலத்துறை அதிகாரிகள் கொடுத்த புகார்படி பனமடங்கி போலீசார் கோவிந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்களை வளர்த்ததற்காக கோவிந்தராஜூக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X