வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகை திருட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகை திருட்டு

Added : ஆக 21, 2021
Share
வேலுார்: புதுவசூரில், வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகை திருடியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வேலுார் மாவட்டம், வேலுார் அருகே புதுவசூர் கே.ஜி.என்., நகரைச் சேர்ந்தவர் விஜயராகவன், 38. தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி கவிதா, 35. இவர் திருவண்ணாமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.மனைவிக்கு உடல் நிலை
வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகை திருட்டு

வேலுார்: புதுவசூரில், வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகை திருடியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலுார் மாவட்டம், வேலுார் அருகே புதுவசூர் கே.ஜி.என்., நகரைச் சேர்ந்தவர் விஜயராகவன், 38. தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி கவிதா, 35. இவர் திருவண்ணாமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால், கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு விஜயராகவன் திருவண்ணாமலைக்குச் சென்றார். இந்நிலையில், இன்று காலை 6:00 மணிக்கு வீட்டுக்கு வந்த போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில், பீரோவில் இருந்த 36 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. சத்துவாச்சாரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X