சிறையில் நளினி- முருகன் உருக்கமான சந்திப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறையில் நளினி- முருகன் உருக்கமான சந்திப்பு

Added : ஆக 21, 2021 | கருத்துகள் (1)
Share
வேலுார்: வேலுார் சிறையில், நளினி - முருகன் உருக்கான சந்திப்பு நடந்தது.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் பெண்கள் சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலுார் மத்திய ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.கணவன் - மனைவி என்பதால் 15 நாளுக்கு ஒரு முறை அதிகாரிகள் முன்னிலையில் சந்தித்து பேசிக் கொள்ள சிறை நிர்வாகம்

வேலுார்: வேலுார் சிறையில், நளினி - முருகன் உருக்கான சந்திப்பு நடந்தது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் பெண்கள் சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலுார் மத்திய ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.கணவன் - மனைவி என்பதால் 15 நாளுக்கு ஒரு முறை அதிகாரிகள் முன்னிலையில் சந்தித்து பேசிக் கொள்ள சிறை நிர்வாகம் அனுமதியளித்திருந்தது.
கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த நான்கு மாதமாக சிறைக்கைதிகள், உறவினர்கள் சந்தித்துப் பேச தடை விதிக்கப்பட்டதால், இவர்கள் சந்திப்பு நடக்கவில்லை. ஆனால், ஆன் லைன் மூலம் அவர்களும், குடும்பத்தினருடனும் சந்தித்து பேசி வந்தனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி முதல் சிறயைில் உள்ள கைதிகளை சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து நளினி - முருகன் சந்திப்பு இன்று நடந்தது. இதற்காக காலை 900 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் முருகனை பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறை அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது.
அப்போது தங்கள் மகள் அரித்திராவின் திருமணம் குறித்தும், தாங்கள் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்தும் அவர்கள் உருக்கமாக பேசியதாகவும், ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத நளினிக்கு முருகன் ஆறுதல் கூறியதாகவும் சிறைத்துறையினர் கூறினர். பின் போலீஸ் பாதுகாப்புடன் வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் முருகனை அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X