மாதம் 1 கோடி தடுப்பூசி: சைடஸ் கேடிலா நிறுவனம் உறுதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாதம் 1 கோடி தடுப்பூசி: சைடஸ் கேடிலா நிறுவனம் உறுதி

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: 'ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி தயாரிக்கப்படும்' என, சைடஸ் கேடிலா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.சைடஸ் கேடிலா நிறுவனத்தின் நிர்நாக இயக்குநர் ஷர்வில் படேல் தெரிவித்து உள்ளதாவது:12 - 17 வயது சிறுவர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்த எங்களது சைடஸ் கேடிலா நிறுவனத்திற்கு நேற்று (ஆக., 20) அனுமதி அளிக்கப்பட்டது.டிசம்பர் -

புதுடில்லி: 'ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி தயாரிக்கப்படும்' என, சைடஸ் கேடிலா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.சைடஸ் கேடிலா நிறுவனத்தின் நிர்நாக இயக்குநர் ஷர்வில் படேல் தெரிவித்து உள்ளதாவது:



latest tamil news



12 - 17 வயது சிறுவர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்த எங்களது சைடஸ் கேடிலா நிறுவனத்திற்கு நேற்று (ஆக., 20) அனுமதி அளிக்கப்பட்டது.டிசம்பர் - ஜனவரி மாதத்திற்குள் 3 முதல் 5 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 5 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்ற அரசின் உறுதிமொழியை நிறைவேற்ற முடியவில்லை.


latest tamil news



தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொண்டு கூட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தயாரிப்பது குறித்து மற்ற நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி தயாரிக்க இருக்கிறோம். புதிய தொழில்நுட்பம், விநியோக சங்கிலி ஆகியவற்றை கணிக்கில் கொண்டு தடுப்பூசியின் விலை நிர்ணயிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.



latest tamil news



பயோடெக்னாலஜி துறையின் உதவியோடு மூன்று தவணை தடுப்பூசியாக சைடஸ் கேடிலாவின் தடுப்பூசி தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட 2வது தடுப்பூசி சைடஸ். முன்னதாக, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சினுக்கு அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுவரை, ஆறு தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X