பிரதமர் மோடி ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம்: நிர்மலா சீதாராமன்

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய ஆட்சியில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல திட்டங்களில் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.லக்னோவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி, கடந்த 2014ல் பதவியேற்க டில்லிக்கு வருவதற்கு முன்னர், குஜராத் முதல்வராக தனக்கு கிடைத்த பரிசுகள் ஏலம் விட்டு,
BJP,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய ஆட்சியில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல திட்டங்களில் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

லக்னோவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி, கடந்த 2014ல் பதவியேற்க டில்லிக்கு வருவதற்கு முன்னர், குஜராத் முதல்வராக தனக்கு கிடைத்த பரிசுகள் ஏலம் விட்டு, கிடைத்த பணத்தை பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடையாக அளித்தார். குஜராத் முதல்வராக இருந்த போதும், மாநிலத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பல்வேறு திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். பெண்களை மையப்படுத்தி பல திட்டங்களை அறிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள உஜ்வாலா, ஜன்தன் அல்லது முத்ரா திட்டம் ஆகட்டும், அனைத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் பெண்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். தற்போது, மத்திய அமைச்சர்களாக 11 பெண்கள் உள்ளனர்.


latest tamil news


இன்று வளர்ந்த நாடுகளில், தடுப்பூசிக்கு பற்றாக்குறை உள்ளது. ஆனால், பிரதமரின் முயற்சியால் இந்தியாவில் 6 தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.sthivinayagam - agartala,இந்தியா
22-ஆக-202105:10:58 IST Report Abuse
T.sthivinayagam பெண்கள் பண்டிதர் ஆக முன்னுரிமை அளிக்கபடுமா ?
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
22-ஆக-202113:26:16 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்நிச்சயமா உங்களுக்கு இல்லாமயா ?...
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
23-ஆக-202114:21:51 IST Report Abuse
Vena Sunaதைரியம் இருந்தா வரட்டும்...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
21-ஆக-202121:22:45 IST Report Abuse
Vena Suna நீங்கள் தமிழகத்தின் முதல் அமைச்சராக வரணும்
Rate this:
Cancel
21-ஆக-202121:07:57 IST Report Abuse
அப்புசாமி அடுத்த பிரதமர் நிர்மலா ஜீ வாழ்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X