பொது செய்தி

தமிழ்நாடு

கோவை மாவட்ட விவசாயிக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் ஆறுதல்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஒட்டர் பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி கோபால் சாமியின் வீட்டுக்கு சென்று அவரது தந்தை காளியப்பன் மற்றும் குடும்பத்தினருக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் ஆறுதல் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் அலட்சியமாக செயல்படுவதாக புகார் தெரிவித்தார்.

கோவை:கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஒட்டர் பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி கோபால் சாமியின் வீட்டுக்கு சென்று அவரது தந்தை காளியப்பன் மற்றும் குடும்பத்தினருக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் ஆறுதல் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் அலட்சியமாக செயல்படுவதாக புகார் தெரிவித்தார். விரைவில் கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். வி.ஏ.ஓ., கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துசாமியை கைது செய்ய வேண்டும். போலி பத்திரிகையாளர்களையும் இதற்கு தூண்டுதலாக செயல்பட்ட அமைப்புகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகிற 23-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தீவிர போராட்டம் அனைத்து அமைப்புகளுடன் சேர்ந்து நடத்தப்படும். கலவரத்தைத் தூண்டிவிடும் அமைப்புகள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும். என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X