சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

இன்பநிதிக்கும் ஒரு 'சலாம்!'

Added : ஆக 21, 2021
Share
Advertisement
இன்பநிதிக்கும் ஒரு 'சலாம்!''மக்கள் ஆசி யாத்திரை' மேற்கொண்டுள்ள மத்திய இணை அமைச்சர் முருகன், கோவை மாவட்டம், துடியலுார் மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு சென்றார்.அங்கு அவர் பேசுகையில், 'சமூக நீதியை பற்றி யார் பேசுவது? தி.மு.க.,வில் சமூக நீதி உள்ளதா? தி.மு.க.,வில், கருணாநிதி குடும்பத்தினரை தவிர, வேறு யாராவது தலைவர் ஆக முடியுமா? பா.ஜ.,வில் ஏழை, எளிய, சாதாரண நபர் தலைவராக
பக்க வாத்தியம்


இன்பநிதிக்கும் ஒரு 'சலாம்!'



'மக்கள் ஆசி யாத்திரை' மேற்கொண்டுள்ள மத்திய இணை அமைச்சர் முருகன், கோவை மாவட்டம், துடியலுார் மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு சென்றார்.
அங்கு அவர் பேசுகையில், 'சமூக நீதியை பற்றி யார் பேசுவது? தி.மு.க.,வில் சமூக நீதி உள்ளதா? தி.மு.க.,வில், கருணாநிதி குடும்பத்தினரை தவிர, வேறு யாராவது தலைவர் ஆக முடியுமா? பா.ஜ.,வில் ஏழை, எளிய, சாதாரண நபர் தலைவராக முடியும்...' என்றார்.அங்கிருந்த முதியவர் ஒருவர், 'என்ன தான் உசுப்பேற்றினாலும், தி.மு.க.,வில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் அசையவே மாட்டார்கள்... அவர்கள் இப்போதே உதயநிதிக்கும், அவர் மகன் இன்ப நிதிக்கும், 'சலாம்' போட ஆரம்பிச்சுட்டாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.


அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரி தான்!



ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா மரியாதை செலுத்தினார்.பின் நிருபர்களிடம் கூறுகையில், 'கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, கொரோனா காரணமாக கிராமசபை கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. அப்போது தி.மு.க., சார்பில் பல இடங்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க., கொரோனாவை காரணம் காட்டி கிராமசபை கூட்டம் நடத்த தடை போட்டுள்ளது...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிச்சு பா.ஜ., விதவிதமாக போராட்டம் நடத்தியது... பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல், டீசல் விலையை ஏற்றவில்லையா... எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரி தான்...' என்றார்; சுற்றியிருந்தோர்
அதை ஆமோதித்தனர்.


எல்லாத்துக்கும்கூடாநட்பு தான் காரணம்!



திண்டுக்கல்லில் சமீபத்தில் நடந்த காங்., ஆலோசனை கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., பங்கேற்றார்.அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் தற்போது தேர்தலை சந்திக்கும் நிலையில் இல்லை. தி.மு.க., கூட்டணியில் உள்ளாட்சி தேர்தல் ஒதுக்கீட்டில் அதிக பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் கோரும்...'
என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'ஒரு காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த காங்கிரஸ், இன்று தி.மு.க.,விடம் இரண்டு, மூன்று 'சீட்'டுகளுக்காக கெஞ்சுற நிலைக்கு வந்துருச்சே... எல்லாத்துக்கும் கூடாநட்பு தான் காரணம்...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை
ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X