சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

'ஜனாதிபதி கனவு பலிக்காது!'

Added : ஆக 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'ஜனாதிபதி கனவு பலிக்காது!''நாமெல்லாம் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி நினைப்போம். ஆனால் எங்கள் தலைவர், யாரும் எதிர்பார்க்காதது போல அதிரடியான அரசியலை அரங்கேற்றுவார்' என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரைப் பற்றி பெருமிதத்துடன் பேசுகின்றனர் அவரது கட்சியினர். சமீப காலமாகவே தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன், சரத் பவார் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.


அக்கம் பக்கம்


'ஜனாதிபதி கனவு பலிக்காது!'



'நாமெல்லாம் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி நினைப்போம். ஆனால் எங்கள் தலைவர், யாரும் எதிர்பார்க்காதது போல அதிரடியான அரசியலை அரங்கேற்றுவார்' என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரைப் பற்றி பெருமிதத்துடன் பேசுகின்றனர் அவரது கட்சியினர். சமீப காலமாகவே தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன், சரத் பவார் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்தாண்டு நடக்கஉள்ள உ.பி., உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்டசபை தேர்தல் மற்றும் 2024ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு மாற்றாக பலமான அணி அமைப்பது தொடர்பாக, அவர் பேசி வருவதாக கூறப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி ஆகியோரையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்ததால், அடுத்த லோக்சபா தேர்தல் தான், அவரது குறி என அனைவரும் நினைத்தனர்.ஆனால் சரத் பவாருக்கு மிகவும் நெருக்கமானவர்களோ, இந்த விவகாரம் குறித்து கண் சிமிட்டுகின்றனர். 'லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, அடுத்தாண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ., சார்பில் ஜனாதிபதி பதவிக்கு யார் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக சரத் பவாரை நிறுத்த வியூகம் தயாராகி வருகிறது' என்கின்றனர், தேசியவாத காங்., கட்சியினர்.
பா.ஜ., வினரோ, 'எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் இணைவது நடக்காத விஷயம். சரத் பவாரின் ஜனாதிபதி கனவு பலிக்காது' என, கிண்டலடிக்கின்றனர்.


பிரதமர் வேட்பாளராக முடியுமா?



'அரசியலில் காலடி எடுத்து வைத்து பல ஆண்டுகள் ஆன பின்னும் என்னை அங்கீகரிக்க மறுக்கின்றனரே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார் காங்கிரஸ் எம்.பி., ராகுல்.அடுத்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு மாற்றாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார் ராகுல். இதற்காக சமீபத்தில் டில்லியில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து, விருந்தளிக்க முடிவு செய்தார். ஆனால் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி சார்பில் இந்த விருந்தில் யாரும் பங்கேற்கவில்லை.
தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் சார்பில் முக்கிய தலைவர்கள் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை. இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் அனுப்பி வைக்கப்பட்டனர். இதைப் பார்த்த ராகுல், 'அப்செட்' ஆனார். 'இந்த விருந்தை நடத்தாமலேயே இருந்திருக்கலாம். என்னை ஒரு முக்கிய தலைவராக ஏற்க, எதிர்க்கட்சியினர் மறுப்பது ஏன்' என குழப்பமடைந்தார். அடுத்த சில நாட்களில் காங்கிரஸ் மேலிடத்தை விமர்சிக்கும் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான கபில் சிபல், இதேபோல் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் லாலு பிரசாத் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.
இதைக் கேள்விப்பட்ட ராகுல், 'அடுத்த லோக்சபா தேர்தலுக்கு எதிர்க்கட்சி கூட்டணிக்கு நம்மை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க விட மாட்டார்கள் போலிருக்கிறது' என புலம்புகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
22-ஆக-202115:37:41 IST Report Abuse
Suppan "என்னை ஒரு முக்கிய தலைவராக ஏற்க, எதிர்க்கட்சியினர் மறுப்பது ஏன்" ராகுல்.. பொறுப்பில்லாமல் விமர்சனம் செய்வது எழுதிக் கொடுத்ததை புரிந்து கொள்ளாமல் பேசுவது . எல்லோரும் இவர் ஒரு ஜோக்கர் என்றே முடிவு செய்து விட்டார்கள் என்று இன்னுமா அறியாமல் இருக்கிறார். பாவம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X