சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: சென்னையில் பூர்வபழங்குடியினருக்கு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று கட்டப்பட்டுள்ளது. அது, அ.தி.மு.க., அரசின் தவறு. அதில் அவசரமாக மக்களை குடியேறச் செய்தது தி.மு.க., அரசின் தப்பு. குடிசையில் இருந்தாலாவது எம் மக்கள் உயிருடன் இருப்பர். அவர்களை அடுக்குமாடியில் அமரச் செய்து கொன்று விடாதீர்.'டவுட்'

'டவுட்' தனபாலு

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: சென்னையில் பூர்வபழங்குடியினருக்கு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று கட்டப்பட்டுள்ளது. அது, அ.தி.மு.க., அரசின் தவறு. அதில் அவசரமாக மக்களை குடியேறச் செய்தது தி.மு.க., அரசின் தப்பு. குடிசையில் இருந்தாலாவது எம் மக்கள் உயிருடன் இருப்பர். அவர்களை அடுக்குமாடியில் அமரச் செய்து கொன்று விடாதீர்.

'டவுட்' தனபாலு: மத்திய அரசும் எவ்வளவோ கிடுக்கிப்பிடிகளை போட்டு தான் பார்க்கிறது; இந்த கான்ட்ராக்டர்களின் கொட்டம் ஓய மாட்டேன் என்கிறதே... நல்ல வேளையாக அந்த கட்டடத்தில் முழு அளவில் மக்கள் குடியேறவில்லை; அதுவரை நல்லது தான். இப்படி தொட்டால் உதிரும் கட்டடம் கட்டியது அ.தி.மு.க., அரசின், 'சாதனை' தான் என்பதில், 'டவுட்'டே இல்லை. அதுபோல தங்கள் சொந்த வீட்டை இப்படி கட்டியிருப்பரா என்பதும் அடுத்த, 'டவுட்' தான்!


ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிர மணியம்:
ஹிந்து தர்மத்தின், உயர்ந்த பக்தி மார்க்கத்தின் ஆணி வேரை அறுத்தெறிய செய்யும் முயற்சி -தான், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் விவகாரம். அதை கடைப்பிடிக்க வேண்டாம்; மக்களின் மனக் கொந்தளிப்புக்கு ஆளாகாதீர்- என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

'டவுட்' தனபாலு: 'ஈ.வெ.ரா.,வின் நெஞ்சில் தைத்த முள்ளை இப்போது தான் அகற்றியுள்ளோம்' என, முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். அந்த பெரியவர் இறந்து 48 ஆண்டுகள் ஆன பின்பு தான், இவர்களால் அவரின் நெஞ்சில் உள்ள முள்ளையே அகற்ற முடிகிறது என்றால், அவரின் விருப்பப்படி, ஹிந்துக்களின் மத உணர்வுகளை அழிக்க 3,000 ஆண்டுகள் ஆனாலும் முடியாதோ என்ற, 'டவுட்' வருகிறது!


தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி:
மேற்கு வங்கத்தை ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆம், அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் குறித்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு கோல்கட்டா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

'டவுட்' தனபாலு: இப்போது, கோல்கட்டா ஐகோர்ட், 'ஓகே' சொல்லியுள்ளது. அதை, மாநில அரசு மேல் முறையீடு மூலம், சுப்ரீம் கோர்ட்டில் தகர்க்குமே அப்போது என்ன செய்வீர்கள்... எனவே, எப்போதுமே வன்முறையற்ற அமைதியான அரசியல் தான், நாட்டு மக்களுக்கு நல்லது. இதை மம்தாவும், பா.ஜ.,வும் எப்போது தான் புரிந்து கொள்ளப் போகின்றனரோ என்பதே, மேற்கு வங்க மக்களின், 'டவுட்' ஆக உள்ளது!


பா.ஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு:
'இங்க கட்சி தான் வளரணும். நம்மைத் தாண்டி வேற யாருமே வளரக்கூடாதுங்க' என்ற எண்ணம் பா.ஜ., ஆட்களிடம் இல்லை. அப்படி நினைத்து இருந்தால், தமிழிசை, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர் வளர்ந்து இருக்க முடியாது. பெண்கள் தங்களைத் தாண்டிப் போகக்கூடாது என்ற எண்ணம் இங்கு யாருக்கும் இல்லை. வேலை செய்றாங்களா... அப்போ வாய்ப்பு தரணும். வளர்த்துவிடணும். அவ்வளவு தான் பா.ஜ.,வில்!

'டவுட்' தனபாலு: பல களம் கண்ட நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்பதில் யாருக்கும், 'டவுட்'டே வராது. எப்படியோ, பா.ஜ., பற்றி அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். அதனால் தான், பா.ஜ.,வில் பிற கட்சிகளை விட நிறைய பெண்கள் இருக்கின்றனரா. வாழ்க பெண் சக்தி!



தி.மு.க., - எம்.எல்.ஏ., பரந்தாமன்:
தொட்டால் சிணுங்கி பார்த்துள்ளோம்; தொட்டாலே உதிரும் சுவரை பார்த்துள்ளோமா... சென்னை புளியந்தோப்பில் மிகவும் தரமற்ற முறையில், அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது அந்த கட்டடம். அதுபோல, அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். அந்த கட்டடத்திற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.

'டவுட்' தனபாலு: உங்களின் இந்த கோரிக்கை நியாயமானது தான். அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடுபவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீர வேண்டும். சரி, உங்கள் அரசிலும் அதுபோன்ற கான்ட்ராக்டர்கள் தானே உள்ளனர். அவர்களாவது சரியாக கட்டுவரா என்பதே, மக்களின், 'டவுட்!'


பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி:
ஆப்கனை விட்டு தப்பியோடியுள்ள அந்நாட்டின் அதிபர் டாக்டர் கனியை, இந்தியாவில் குடியேற அழைக்க வேண்டும். அவர் அதிகம் படித்தவர்; அமெரிக்காவில் பெரிய படிப்பு படித்தவர். இந்தியாவில் அவரை தற்காலிக ஆப்கன் அரசை நிறுவ செய்ய வேண்டும். இதன் மூலம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் தலிபான்களை நுழைய விடாமல் செய்ய வேண்டும்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்லும் அறிவுரை எல்லாம் இந்த காலத்திற்கு பொருந்தாது. அமெரிக்காவே, 'அவர்கள் நாட்டு பிரச்னையை அவர்களே பார்த்துக் கொள்வர்' என கூறி, ஆப்கனை விட்டு விலகி விட்டது. இந்தியாவை மூக்கை நுழைக்கச் சொல்கிறீர்களே; நாடு நல்லா இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வரப் போகிறது!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
22-ஆக-202115:53:31 IST Report Abuse
Suppan "சென்னை புளியந்தோப்பில் மிகவும் தரமற்ற முறையில், அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது அந்த கட்டடம். " கமிஷனுக்கு ஒரு அளவே இல்லாமல் 45% கேட்டால் அந்த ஒப்பந்ததாரர் என்னதான் செய்வார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X