நகை கடன் தள்ளுபடியில் திக்குமுக்காடும் தி.மு.க.,| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

நகை கடன் தள்ளுபடியில் திக்குமுக்காடும் தி.மு.க.,

Added : ஆக 21, 2021 | கருத்துகள் (1)
Share
நகை கடன் தள்ளுபடியில் திக்குமுக்காடும் தி.மு.க.,''எஸ்.பி., தனிப்படையால, 'கட்டிங்' போலீசார் கலக்கத்துல இருக்காவ வே...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார் அண்ணாச்சி.''எந்த மாவட்டத்துலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''கோவை மாவட்டம், ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு ஸ்டேஷன்கள்ல வேலை பார்த்த தனிப்பிரிவு போலீசார், பல வருஷங்களா இந்த மூணு ஸ்டேஷன்கள்லயே மாறி மாறி,
 டீ கடை பெஞ்ச்


நகை கடன் தள்ளுபடியில் திக்குமுக்காடும் தி.மு.க.,''எஸ்.பி., தனிப்படையால, 'கட்டிங்' போலீசார் கலக்கத்துல இருக்காவ வே...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார் அண்ணாச்சி.

''எந்த மாவட்டத்துலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''கோவை மாவட்டம், ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு ஸ்டேஷன்கள்ல வேலை பார்த்த தனிப்பிரிவு போலீசார், பல வருஷங்களா இந்த மூணு ஸ்டேஷன்கள்லயே மாறி மாறி, 'டிரான்ஸ்பர்' வாங்கி, சுத்திட்டு இருக்காவ வே...

''உள்ளூர் போலீசாருடன் கூட்டணி போட்டு, பல தகவல்கள், குற்ற சம்பவங்களை, எஸ்.பி.,க்கு தெரிவிக்காம மறைச்சிடுதாவ... சூதாட்டம், கஞ்சா, மது விற்பனை செய்றவங்களிடம் மாமூலும் வாங்கி கொழிச்சிட்டு இருந்தாவ வே...

''இது சம்பந்தமா, இப்பகுதி மக்கள் பலரும், எஸ்.பி., செல்வ நாகரத்தினத்துக்கே நேரடியா புகார் தெரிவிச்சிருக்காவ... இதனால தனிப்பிரிவு உள்ளூர் போலீசாருக்கு தெரியாம, எஸ்.பி., ஒரு தனிப்படையை இந்த பகுதிகளுக்கு அனுப்பி, சட்டவிரோத தொழில் செய்றவங்களை பிடிச்சிருக்காரு வே...

''இந்த கும்பலிடம் மாமூல் வாங்கிட்டு இருந்த போலீசார் பட்டியலையும் சேகரிச்சிட்டு இருக்காரு... இதனால, தனிப்பிரிவு போலீசார் பீதியில இருக்காவ வே...'' என்றார்
அண்ணாச்சி.

''பெரியண்ணன் போக்கால, கூட்டணி கட்சிகள் விரக்தியில இருக்குது பா...'' என்றார் அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''சென்னை ஐகோர்ட் உட்பட தமிழகம் முழுக்க 200க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கான பட்டியல், ஆளுங்கட்சி தரப்புல தயாராகிட்டு இருக்குது பா...

''இதுல, கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு, ஒற்றை இலக்கத்துல தான், அரசு வழக்கறிஞர் பதவி தருவோம்னு, ஆளுங்கட்சி தரப்புல கறார் காட்டுறாங்க பா...

''இதனால, 'சட்டசபை தேர்தல்லயும் இப்படித்தான் கண்டிப்பா இருந்து, நமக்கு தொகுதிகளை குறைச்சாங்க... நம்ம கட்சியினரையும் நாம சமாளிக்க வேண்டாமா'ன்னு, கூட்டணி கட்சியினர் குமுறிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''வாக்குறுதி கொடுத்து வசமா மாட்டிக்கிட்டாங்க...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார் அந்தோணிசாமி.

''ஆளுங்கட்சி தகவலா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''ஆமாம்... தி.மு.க., தேர்தல் வாக்குறுதியா 5 சவரன் நகை கடன்களை தள்ளுபடி பண்ணுவோம்னு அறிவிச்சாங்கல்ல... இதனால, விவசாயிகள் மட்டுமில்லாம, அனைத்து தரப்பு மக்களும், கூட்டுறவு வங்கிகள்ல நகை கடன் வாங்குனாங்க...

''ஆட்சிக்கு வந்து, நகை கடன் கணக்கை எடுத்து பார்த்த தமிழக அரசுக்கு தலை சுத்திடுச்சுங்க... ஏன்னா, தமிழகம் முழுக்க 85 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல நகை கடன் இருக்காம்... இதனால, மொத்த கடன் தள்ளுபடி தொகையை 10 ஆயிரம் கோடியா குறைக்கணும்னு, 'டார்கெட்' நிர்ணயிச்சு, பல நிபந்தனைகளோட நிறைய பேரை கழிச்சு கட்டி, புதுசா பட்டியல் தயாரிச்சிட்டு
இருக்காங்க...

''இதனால, கொரோனா நெருக்கடியில நகை கடன் வாங்குன நிறைய பேர் பாதிக்கப்படுவாங்களாம்... 'கடன் தள்ளுபடின்னு மொத்தமா வாக்குறுதி தந்துட்டு, குறைஞ்ச பேருக்கு மட்டும் தள்ளுபடி செய்தா, பொதுமக்கள் நம்மை வசைபாடுவாங்களே'ன்னு, ஆளுங்கட்சியினர் கவலையில இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.


விசாரணை குழுவை 'வளைத்த' தி.மு.க., புள்ளிகள்!''கலெக்டர் கூப்பிட்டு, 'டோஸ்' விட்டதும் தான், நடவடிக்கை எடுத்திருக்காரு பா...'' என, முதல் தகவலை பேச ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''எந்த ஊர் கலெக்டர், யாருக்கு டோஸ் விட்டார் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரியில, கேரளாவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் உறவினர் பெண் பிரசவத்துக்கு சேர்ந்தாங்க... குழந்தை பிறந்ததும், விடாம அழுதுட்டே இருந்திருக்குது பா...

''இதை, பெண்ணின் உறவினர், நர்ஸ்களிடம் போய் சொன்னப்ப, அவங்க கடுமையா திட்டி அனுப்பிட்டாங்களாம்... 'டிஸ்சார்ஜ்' ஆகி கேரளாவுக்கு திரும்பிய அந்த பெண்ணும், அவங்க கணவரும், 'திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் மோசமா செயல்படுது'ன்னு, 'வாட்ஸ் ஆப்'ல தகவல்களை பரப்பியிருக்காங்க பா...

''இது, கலெக்டர் வினீத் கவனத்துக்கு வர, விசாரணை நடத்தியிருக்கார்... அதுல, கேரளா பெண் பாதிக்கப்பட்டது உண்மைதான்னு தெரியவர, 'டீன்' முருகேசனை அழைச்சு கண்டிச்சிருக்கார்... அப்புறமா, அந்த வார்டுல பணியில இருந்த நர்ஸ்களுக்கு டீன் இப்ப, 'மெமோ' குடுத்திருக்காரு பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''உத்தரவெல்லாம் வெறும் பேப்பர்ல தான் இருக்கு ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''விளக்கமா சொல்லும் வே...'' என்றார் அண்ணாச்சி.

''தமிழக போலீசாருக்கு வார விடுப்பு, அவங்க பிறந்த நாள், திருமண நாளுக்கு சிறப்பு விடுப்பு வழங்கணும்னு, போன மாசம் டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவு போட்டாரோல்லியோ... இதுக்கு, போலீசார் மத்தியில பலத்த வரவேற்பு கிடைச்சது ஓய்...

''ஆனா, ஸ்டேஷன், சிறப்பு பிரிவுகள்ல பணியாற்றும் போலீசாருக்கு வார விடுப்பு வழங்கறது இல்லை... பல ஸ்டேஷன்கள்ல, ஆட்கள் பற்றாக்குறை, வேலைப் பளுவை காரணம் காட்டி, விடுப்பு தர அதிகாரிகள் மறுத்துடறா... இதனால, போலீசார் பலரும் விரக்தியில இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''விசாரிக்க வந்த குழுவையும் வளைச்சுட்டாங்க...'' என, புதிய தகவலை கையில் எடுத்தார் அந்தோணிசாமி.

''என்ன விசாரணையை சொல்லுதீரு...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தனி தொகுதியில, தி.மு.க., கூட்டணியில போட்டியிட்ட ம.தி.மு.க., துணை பொதுச் செயலர் மல்லை சத்யா, தோத்து போயிட்டாரே... 'இதுக்கு, அச்சிறுப்பாக்கம் ஒன்றிய, மதுராந்தகம் நகர தி.மு.க., நிர்வாகிகள் தான் முழு காரணம்... ரெண்டு பேரும், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக வேலை பார்த்ததால, தோத்துட்டோம்'னு ம.தி.மு.க., தரப்புல, அறிவாலயத்துல புகார் குடுத்திருந்தாங்க...

''இந்த புகாரை விசாரிக்க, நாகப்பட்டினம், சீர்காழி பகுதியைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் தலைமையில குழு அமைத்து மேலிடம் அனுப்பி வச்சதுங்க... விசாரிக்க போன குழுவினரை, ஒன்றிய, நகர நிர்வாகிகள், மேல்மருவத்துார்ல ஒரு ஓட்டல்ல தங்க வச்சு, 'சிறப்பா கவனிச்சு' அனுப்பிட்டாங்க...

''இதனால அந்த குழு, புகார் தந்தவங்களிடம் பேருக்கு கூட விசாரணை நடத்தாம, கமுக்கமா திரும்பி போயிடுச்சாம்... 'இப்படி மேலிட குழுவே, ஒருதலைபட்சமா இருந்தா எப்படி'ன்னு ம.தி.மு.க.,வினர் மனம் குமுறிட்டு இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X