ஆக., 22, 2016
சிங்கப்பூரில், 1924 ஜூலை 3ம் தேதி பிறந்தவர் செல்லப்பன் ராமநாதன் என்ற எஸ்.ஆர்.நாதன். சிங்கப்பூர் தமிழரான இவர், மலாயா பல்கலையில் சமூகவியல் பட்டம் பெற்றார். சிங்கப்பூர் சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, 1955ல் மருத்துவ சமூக அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
பின் வெளியுறவுத் துறை செயலர், பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு இயக்குனர், அமெரிக்காவிற்கான சிங்கப்பூர் துாதர் என படிப்படியாக பல முக்கிய பதவிகள் வகித்தார்.கடந்த 1999ல், சிங்கப்பூர் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது உலகம் முழுதும் பொருளாதார தேக்க நிலை நிலவியது. அதிலிருந்து சிங்கப்பூரை மீட்டு, வளர்ச்சி பாதையில் வழி நடத்தினார். இதன் காரணமாக, 2005ல் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்
பட்டார்.வெளிநாடு வாழ் இந்தியருக்கு, நம் நாடு வழங்கும், 'பர்வாசி பாரதிய சன்மான்' விருது, இவருக்கு 2012-ம் ஆண்டு வழங்கப்பட்டது. 2016 ஆக., 22ம் தேதி தன் 92வது வயதில் இயற்கை எய்தினார்.எஸ்.ஆர்.நாதன், காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE