பொது செய்தி

தமிழ்நாடு

பண்ணை பசுமை காய்கறி கடைகளை மூட பரிசீலனை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சென்னை:இடைத்தரகர்களும், அதிகாரிகளும் மட்டும் பயன் பெறும், பண்ணை பசுமை காய்கறி கடைகளை மூடுவது தொடர்பாக, கூட்டுறவு துறை பரிசீலித்து வருகிறது.தமிழகத்தில், 2013ல் காய்கறிகளின் விலை உயர்ந்தது. அதனால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, பண்ணை பசுமை என்ற பெயரில், காய்கறி கடைகளை துவக்கினார்.ஆர்வம் காட்டவில்லைஅங்கு துவக்கத்தில், கூட்டுறவு

சென்னை:இடைத்தரகர்களும், அதிகாரிகளும் மட்டும் பயன் பெறும், பண்ணை பசுமை காய்கறி கடைகளை மூடுவது தொடர்பாக, கூட்டுறவு துறை பரிசீலித்து வருகிறது.

தமிழகத்தில், 2013ல் காய்கறிகளின் விலை உயர்ந்தது. அதனால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, பண்ணை பசுமை என்ற பெயரில், காய்கறி கடைகளை துவக்கினார்.


ஆர்வம் காட்டவில்லை

அங்கு துவக்கத்தில், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளிடம் இருந்து, தரமான காய்கறிகள் நேரடியாக வாங்கப்பட்டு, குறைந்த விலைக்கு விற்கப்பட்டன. இதனால், மக்களும், விவசாயிகளும் பயன் பெற்றனர்.ஜெயலலிதா மறைவுக்கு பின், சென்னை, கோயம்பேடு போன்ற முக்கிய சந்தைகளில் உள்ள வியாபாரிகளிடம் இருந்து காய்கறிகள் வாங்கப்பட்டு, பசுமை கடைகளில் விற்கப்பட்டன. அவற்றின் தரம் குறைவாக இருந்ததுடன், விலையும் அதிகமாக இருந்தது. இதனால், அந்தக் கடைகளில் காய்கறி வாங்க, மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களின் நஷ்டத்தை குறைப்பது தொடர்பாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, காய்கறி கடைகளை மூடலாமா என்பது தொடர்பாக, கூட்டுறவு துறை பரிசீலித்து வருகிறது.

இது குறித்து, கூட்டுறவு காய்கறி கடை ஊழியர்கள் கூறியதாவது:சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், தற்போது, 79 பண்ணை பசுமை காய்கறி கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைக்கும், 10 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் அனுப்பப்படும். அதில், பாதி கூட விற்பனையாவது இல்லை.அதிகாரிகள், மிரட்டி விற்க சொல்வர். கூட்டுறவு சங்கம், ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களிடம் காய்கறி விற்கப்படுகிறது. கடையில் தேங்கும் காய்கறிக்கான மொத்த பணத்தில் பாதியை, ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்கின்றனர்.


உழவர் சந்தை

ஜெயலலிதா துவக்கியது என்பதால், கண் துடைப்பிற்காகவே அதிகாரிகள், காய்கறி கடைகளை நடத்தினர். மக்களுக்காக துவங்கிய காய்கறி கடைகளால், அதிகாரிகளும், வியாபாரிகளும், இடைத்தரகர்களும் தான் அதிகம் பயன் பெறுகின்றனர்.இதனால், சங்கங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. புதிய அரசு, உழவர் சந்தைகளுக்கு முக்கியத்துவம் தர திட்டமிட்டுள்ளது. எனவே, காய்கறிக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது, வாகனங்களில் எடுத்து சென்று விற்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X