திறந்தநிலை பல்கலையில் மாணவர் சேர்க்கை துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திறந்தநிலை பல்கலையில் மாணவர் சேர்க்கை துவக்கம்

Added : ஆக 21, 2021
Share
சென்னை:தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், 2021 - 2022ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.நடப்பு கல்வியாண்டில், இப்பல்கலை 58 படிப்புகளை தொலைதுாரக் கல்வி முறையில் வழங்குகிறது. இதில் 29 இளநிலை, 19 முதுநிலை, 10 பட்டயம், தொழிற்பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் அடங்கும்.மற்ற பல்கலை மாணவர்களுக்கு இணையான கல்வியை வழங்கும் வகையில், அதிகமான படிப்புகளை பருவ முறையில்

சென்னை:தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், 2021 - 2022ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

நடப்பு கல்வியாண்டில், இப்பல்கலை 58 படிப்புகளை தொலைதுாரக் கல்வி முறையில் வழங்குகிறது. இதில் 29 இளநிலை, 19 முதுநிலை, 10 பட்டயம், தொழிற்பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் அடங்கும்.மற்ற பல்கலை மாணவர்களுக்கு இணையான கல்வியை வழங்கும் வகையில், அதிகமான படிப்புகளை பருவ முறையில் வழங்குகிறது.தற்கால சூழலுக்கு உகந்த வகையில் அனைத்து பாடத் திட்டங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

பல்கலை நிதி நல்கைக் குழு மற்றும் தமிழக அரசின் அரசாணைகளின்படி, திறந்த நிலை பல்கலையில் படித்து பெற்ற பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் சான்றிதழ்கள், அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பிற்கு தகுதியானவை.அரசு கல்லுாரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள், திறந்தநிலை பல்கலை படிப்புகளில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஆர்வம் உள்ளவர்கள், tnouadmissions.in/onlineapp என்ற இணையதளம் அல்லது, சென்னை, கோவை, தர்மபுரி, மதுரை, நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மண்டல மையங்கள் அல்லது 132 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் அல்லது 93459 13378, 93459 13376 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என, பல்கலை பதிவாளர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X