சிறுத்தையுடன் போராடி பேத்தியை மீட்ட தம்பதி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
போபால்:மத்திய பிரதேசத்தில் குனா தேசிய வனவிலங்குகள் பூங்காவின் அருகேயுள்ள துரா கிராமத்தில் வசிப்பவர் ஜெய்சிங் குர்ஜார் 55. இவரது மனைவி பசந்தி பாய் குர்ஜார் 50.இருவரும் சமீபத்தில் இரவில் தங்கள் 2 வயது பேத்தியுடன் வீட்டில் துாங்கிக் கொண்டு இருந்தனர்.திடீரென குழந்தை அலறும் சத்தம் கேட்டு விழித்த பசந்திபாய் ஒரு சிறுத்தை குழந்தையின் காலை கவ்விப்பிடித்து இழுத்துச் செல்ல

போபால்:மத்திய பிரதேசத்தில் குனா தேசிய வனவிலங்குகள் பூங்காவின் அருகேயுள்ள துரா கிராமத்தில் வசிப்பவர் ஜெய்சிங் குர்ஜார் 55. இவரது மனைவி பசந்தி பாய் குர்ஜார் 50.இருவரும் சமீபத்தில் இரவில் தங்கள் 2 வயது பேத்தியுடன் வீட்டில் துாங்கிக் கொண்டு இருந்தனர்.

திடீரென குழந்தை அலறும் சத்தம் கேட்டு விழித்த பசந்திபாய் ஒரு சிறுத்தை குழந்தையின் காலை கவ்விப்பிடித்து இழுத்துச் செல்ல முயற்சிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கூச்சல் போட்ட அவர் சிறுத்தையை எட்டி உதைத்தார். ஜெய்சிங் குர்ஜாரும் பேத்தியை காப்பாற்ற தன் பலம் முழுவதையும் திரட்டி சிறுத்தையை தாக்கினார்.

இதனால் குழந்தையை விட்ட அந்த சிறுத்தை தம்பதியை தாக்கத் துவங்கியது. பெரும் கூச்சல் எழுந்ததால் கிராமத்தினர் ஆயுதங்களுடன் திரண்டனர்; சிறுத்தை வனத்திற்குள் ஓடியது. காயமடைந்த தம்பதிமற்றும் குழந்தையை வனத்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X