'மாஜி' கமிஷனர் மீது மேலும் ஒரு வழக்கு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
மும்பை:மிரட்டி பணம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த வழக்கில் சச்சின் வாஸே என்ற போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தவறாக வழி நடத்தியதாக
 'மாஜி' கமிஷனர் மீது மேலும் ஒரு வழக்கு

மும்பை:மிரட்டி பணம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவின் மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த வழக்கில் சச்சின் வாஸே என்ற போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தவறாக வழி நடத்தியதாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக பரம்வீர் சிங் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பையை சேர்ந்த பீமல் அகர்வால் என்ற 'பில்டரிடம்' இருந்து பரம்வீர் சிங் உள்ளிட்ட ஆறு பேர் ௯ லட்சம் ரூபாய் பணத்தை மிரட்டிப் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பரம்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X