சில வரி செய்திகள்...: இந்தியா| Dinamalar

சில வரி செய்திகள்...: இந்தியா

Added : ஆக 21, 2021
Share
நக்சலைட்டுகள் கைதுராஜ்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த தேடுதல் வேட்டையில் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த ரவா கங்கா கைதானார். மற்றொரு நடவடிக்கையில் தாண்டேவாடா மாவட்ட வனப்பகுதியில் சுக்ராம் கவாசி 35 என்ற நக்சலைட் போலீசாரிடம் சிக்கினார். இவர்களில் ரவா கங்கா 2011ல் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தலில் தொடர்புடையவர்.குழந்தைக்கு

நக்சலைட்டுகள் கைது

ராஜ்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த தேடுதல் வேட்டையில் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த ரவா கங்கா கைதானார். மற்றொரு நடவடிக்கையில் தாண்டேவாடா மாவட்ட வனப்பகுதியில் சுக்ராம் கவாசி 35 என்ற நக்சலைட் போலீசாரிடம் சிக்கினார். இவர்களில் ரவா கங்கா 2011ல் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தலில் தொடர்புடையவர்.

குழந்தைக்கு விலை

நாடியட்: குஜராத்தின் கேடா மாவட்டம் நாடியட் நகரில் பச்சிளம் குழந்தையை மூன்று பெண்கள் விற்பனை செய்ய முயற்சிப்பதை அறிந்த போலீசார் வாடிக்கையாளர் போல் அவர்களை தொடர்பு கொண்டனர். குழந்தைக்கு ௬ லட்சம் ரூபாய் விலை பேசிய மஹாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த மோனிகாபென் ஷா உட்பட மூன்று பெண்களையும் போலீசார் கைது செய்தனர். பின் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்த தாயும் கைதானார்.

தலிபான் ஆதரவாளர்கள் கைது

கவுஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்த சிலர் ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதை ஆதரித்து தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 14 பேரை கைது செய்துள்ளனர்.

விவசாயிகள் ரயில் மறியல்

சண்டிகர்: பஞ்சாபில் கரும்பு கொள்முதல் தொகையை உயர்த்துதல் மற்றும் நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை துவக்கி உள்ளனர். ஜலந்தர் மாவட்டத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் விவசாயிகளின் ரயில் மறியலால் 50 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X