வாய் திறக்காதது ஏன்? எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல்!

Added : ஆக 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஸ்ரீநகர்:'சட்டப்பிரிவு 370 குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் வாய் திறக்காமல் இருப்பதை பார்த்தால் ஜம்மு - காஷ்மீரிடம் இருந்து சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதற்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பது போல் உள்ளது' என ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி கூறி உள்ளது.காங். உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேற்று முன்தினம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை

ஸ்ரீநகர்:'சட்டப்பிரிவு 370 குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் வாய் திறக்காமல் இருப்பதை பார்த்தால் ஜம்மு - காஷ்மீரிடம் இருந்து சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதற்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பது போல் உள்ளது' என ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி கூறி உள்ளது.

காங். உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேற்று முன்தினம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினர்.அதில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப வழங்கக் கோரியும் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களை விடுவிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் செய்தித் தொடர்பாளர் அதனன் அஷ்ரப் மிர் கூறியதாவது:நாட்டில் உள்ள 19 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ குறித்து யாரும் வாய் திறக்கவில்லை. இது ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஏற்கும் வகையில் அமைந்துள்ளது.

அந்த கூட்டத்தில் பங்கேற்ற தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முப்தியும் கூட இந்த விஷயத்தில் இதர எதிர்க்கட்சிகளை சமரசம் செய்ய தவறிவிட்டனர்.எதிர்க்கட்சிகளிடம் இது குறித்து பேசாத இந்த மூத்த தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? ஜம்மு - காஷ்மீர் மக்களை இவர்கள் இருவரும் வஞ்சித்துவிட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
22-ஆக-202121:37:05 IST Report Abuse
sankar மோடி அவர்கள் செய்வது அவ்வளவும் நல்லவையே என்பது இவர்களுக்கு தெரியும் - ஆனால் இவர்களும் கடையை நடத்தணுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X