காங்கிரஸ் நிர்வாகி விலகல் மம்தா கட்சியில் இணைவாரா?

Added : ஆக 21, 2021
Share
Advertisement
அகர்தாலா:திரிபுரா மாநில காங். தலைவர் பிஜுஷ் காந்தி பிஸ்வாஸ் அக்கட்சியில் இருந்து விலகினார். திரிணமுல் காங்கிரசில் அவர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநில காங். தலைவர் பிஜுஷ் காந்தி பிஸ்வாஸ் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் மம்தா பானர்ஜியின்
 காங்கிரஸ் நிர்வாகி விலகல் மம்தா கட்சியில் இணைவாரா?

அகர்தாலா:திரிபுரா மாநில காங். தலைவர் பிஜுஷ் காந்தி பிஸ்வாஸ் அக்கட்சியில் இருந்து விலகினார். திரிணமுல் காங்கிரசில் அவர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநில காங். தலைவர் பிஜுஷ் காந்தி பிஸ்வாஸ் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங். கட்சியில் இணையலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து பிஜுஷ் காந்தி பிஸ்வாஸ் கூறியதாவது: திரிபுரா காங். தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். அரசியலில் இருந்தும் ஓய்வு பெற விரும்புகிறேன். கட்சியில் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X