பொது செய்தி

இந்தியா

கடை அடைப்பை கைவிடுங்கள் நகை நிறுவனங்களுக்கு கோரிக்கை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
புதுடில்லி:தங்க நகையின் தரத்தை குறிக்கும் 'ஹால்மார்க்' முத்திரை பதிப்பதை கட்டாயமாக்கியதை எதிர்த்து நகை நிறுவனங்கள் நாளை நடத்தும் கடை அடைப்பு போராட்டத்தை கைவிடும்படி இந்திய தர நிர்ணய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாம் வாங்கும் தங்க நகைகளின் தரத்தை குறிக்க அவற்றில் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் நம்பிக்கையுடன் தரத்திற்கேற்ற தங்க நகைகளை

புதுடில்லி:தங்க நகையின் தரத்தை குறிக்கும் 'ஹால்மார்க்' முத்திரை பதிப்பதை கட்டாயமாக்கியதை எதிர்த்து நகை நிறுவனங்கள் நாளை நடத்தும் கடை அடைப்பு போராட்டத்தை கைவிடும்படி இந்திய தர நிர்ணய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நாம் வாங்கும் தங்க நகைகளின் தரத்தை குறிக்க அவற்றில் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் நம்பிக்கையுடன் தரத்திற்கேற்ற தங்க நகைகளை வாங்கி வருகின்றனர்.இந்நிலையில் மத்தியஅரசு முதற்கட்டமாக 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 256 மாவட்டங்களில் மட்டும் தங்க நகைகளுக்கு 'ஹால்மார்க்' முத்திரை பதிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

இந்த திட்டம் ஜூன் 16ல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஹால்மார்க் முத்திரை பெறுவதில் உள்ள சிரமங்களை கூறி இத்திட்டத்தை கட்டாயமாக்கியதை எதிர்த்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பு நாளை நாடு தழுவிய கடையடைப்பை நடத்துகிறது.

இது குறித்து இந்திய தர நிர்ணய அமைப்பின் தலைமை இயக்குனர் பிரமோத் குமார் திவாரி கூறியதாவது:கட்டாய ஹால்மார்க் திட்டம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அறிமுகமான 50 நாட்களில் 1 கோடி தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஹால்மார்க் பதிவிற்காக விண்ணப்பித்த நகை கடைக்காரர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தில்இருந்து 91 ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது.

பெரும்பாலான நகை கடைக்காரர்கள் ஹால்மார்க் கட்டாயமாக்கியதை வரவேற்றுள்ளனர். ஆனால் சிலர் கடை அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.இதற்கு தங்க நகை அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறைகளை சரி செய்ய இந்த அரசு காத்திருக்கிறது. எனவே கடையடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X