150 இந்தியர்களை கடத்திய தலிபான்கள் விடுவித்தனர்

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி :தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து தப்ப முயன்ற 150 இந்தியர்கள், காபூல் விமான நிலையம் அருகே தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பல மணி நேர விசாரணைக்குப் பின், அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தலிபான்கள் அறிவித்தனர்.ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரம் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததில் இருந்து, அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்தியா, தலிபான்கள், கடத்தல், விசாரணை, விடுதலை

புதுடில்லி :தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து தப்ப முயன்ற 150 இந்தியர்கள், காபூல் விமான நிலையம் அருகே தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பல மணி நேர விசாரணைக்குப் பின், அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தலிபான்கள் அறிவித்தனர்.ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரம் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததில் இருந்து, அங்கு பதற்றம் நிலவுகிறது. உயிருக்கு அஞ்சி மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அங்குள்ள துாதரகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் உட்பட, 200 இந்தியர்கள் சமீபத்தில் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். இதைத் தவிர, காபூலில் உள்ள குருத்வாராவில் 200 சீக்கியர்கள் தஞ்சமடைந்து உள்ளனர்.


நாடு திரும்ப தயார்ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள், நாடு திரும்புவதற்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காபூல் விமான நிலையம் உள்ளது. பல நாட்டவர் மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் குவிந்து வருவதால், விமான நிலையத்தில் பெரும் நெருக்கடி மற்றும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், காபூல் விமான நிலையம் செல்ல முயன்றபோது, 150 இந்தியர் உள்ளிட்டோரை, தலிபான் பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தினர்; அவர்களது வாகனங்கள் வேறொரு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டன.


பரிசோதனைஇதையடுத்து, இந்தியர்களை தலிபான்கள் கடத்திச் சென்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால், மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் நிலவியது.

இந்நிலையில், 'பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையம் சென்றவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. மற்றபடி யாரையும் கடத்தவில்லை' என, தலிபான்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தலிபான்களின் பல மணி நேர விசாரணைக்குப் பின், 150 இந்தியர்கள் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானதால் நிம்மதி ஏற்பட்டது.


குழந்தை ஒப்படைப்புகாபூலில் உள்ள விமான நிலையத்தில், முள்வேலியுடன் கூடிய சுவர் இருப்பதால், மக்களால் உள்ளே நுழைய முடியவில்லை. சில நாட்களுக்கு முன், விமான நிலையத்திற்கு வெளியே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, முள்வேலியை தாண்டி அமெரிக்க ராணுவ வீரர்களிடம் ஒரு கைக்குழந்தையை அதன் பெற்றோர் கொடுக்கும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், ராணுவ வீரர்களிடம் வழங்கப்பட்ட அந்த குழந்தை, தற்போது அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தலிபான்களுக்கு ஆதரவு
தலிபான்கள் தலைமையில் ஆப்கனில் அமையவுள்ள புதிய அரசுக்கு, முன்னாள் அதிபரும், நாட்டை விட்டு தப்பி ஓடியவருமான அஷ்ரப் கனியின் சகோதரர் ஹஷ்மத் கனி அகமதுஜாய், ஆதரவு தெரிவித்து உள்ளார். தலிபான் மூத்த தலைவர் கலிலுர் ரஹ்மான் முன்னிலையில் இதுகுறித்த அறிவிப்பை, ஹஷ்மத் கனி நேற்று வெளியிட்டார்.


சேர்ந்து படிக்க தடைஆப்கனில் ஹீரட் மாகாணத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும், மாணவர்களுடன் மாணவியர் சேர்ந்து படிக்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தலிபான் உயர் கல்வித் துறை பிரதிநிதி முல்லா பரித், அனைத்து பல்கலை பேராசிரியர்கள், தனியார் கல்வி மைய உரிமையாளர்கள் ஆகியோருடன் நடத்திய பேச்சில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கனை கைப்பற்றிய பின், தலிபான் விதித்துள்ள முதல் 'பத்வா' இது.

இது குறித்து முல்லா பரித் கூறியதாவது: கல்வி மையங்களில் ஆண், பெண் சேர்ந்து படிப்பது தான் சமூக தீமைகளுக்கான ஆணி வேராக உள்ளது. அதனால், இணை கல்வி திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண் பேராசிரியர்கள், மாணவியருக்கு மட்டும் பாடம் நடத்துவர். இவ்வாறு அவர் கூறினார்.


தலிபான் ஆட்சி எப்போது?வரும் 31ம் தேதி அமெரிக்க ராணுவம் ஆப்கனை விட்டு முழுமையாக வெளியேறிய பின், அரசு அமைப்பது பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாக தலிபான் அறிவித்துள்ளது.

ஆட்சி அமைப்பது தொடர்பாக தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர், ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று ஹமீத் கர்சாய், மூத்த அரசு அதிகாரி அப்துல்லா அப்துல்லா ஆகியோர், காபூலின் தற்காலிக தலிபான் கவர்னரை சந்தித்தனர். அப்போது காபூல் மக்களின் பாதுகாப்புக்கு கவர்னர் உறுதி அளித்ததாக, அப்துல்லா அப்துல்லா தெரிவித்துள்ளார்.


மீட்பு பணியில் ஆபத்து:ஜோ பைடன் எச்சரிக்கைஅமெரிக்காவில் உள்ள அதிபரின் வெள்ளை மாளிகை யில், அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: ஆப்கனில் உள்ள அமெரிக்கர்கள், பத்திரிகையாளர்கள், பெண்ணுரிமை ஆர்வலர்கள் உட்பட அனைவரையும் மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடக்கிறது. ஜூலை முதல், 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அமெரிக்கா திரும்பியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில், விமானப் படை வாயிலாக 13 ஆயிரம் பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆப்கனில் இருந்து, நேச நாடுகளைச் சேர்ந்த 65 ஆயிரம் பேர் வெளியேற காத்திருக்கின்றனர்; அவர்களை அழைத்து வருவோம். எனினும் மீட்பு நடவடிக்கைகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த மீட்பு நடவடிக்கை மிகவும் பயங்கரமானது. ஆபத்தான சூழலில் அமெரிக்க ராணுவத்தினர் உயிரைப் பணயம் வைத்து மக்களை மீட்டு வருகின்றனர். இந்த பணி உயிரிழப்பின்றி நிறைவேறுமா, இல்லையா என்பதை நான் உறுதிபடக் கூற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


பேச்சு நடத்த பிரிட்டன் தயார்ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அமைச்சரவை குழு கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது.

அதன்பின், பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாவது: ஆப்கானிஸ்தானில் நிலைமை தற்போது சற்று மேம்பட்டுள்ளது. அங்கு சிக்கியுள்ள பிரிட்டன் மக்களை மீட்டு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.மீட்பு பணி மிகவும் சிக்கலாக உள்ளது. இருப்பினும் அரசியல் மற்றும் துாதரக உறவுகள் வாயிலாக முயற்சி எடுத்து வருகிறோம். ஆப்கானிஸ்தானில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, தேவைப்பட்டால் தலிபான்களுடனும் பேசத் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


85 பேர் மீட்புஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து இந்தியர்களையும், பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, நம் வெளியுறவுத் துறை தெரிவித்துஉள்ளது.

இந்நிலையில் காபூலில் இருந்து, 85 இந்தியர்களுடன், நம் விமானப் படை விமானம் நேற்று காலையில் புறப்பட்டது. தஜிகிஸ்தானின் துஷான்பே விமான நிலையத்தில் அது தரையிறங்கியது. அங்கிருந்து அவர்களை அழைத்து வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
22-ஆக-202122:52:32 IST Report Abuse
N Annamalai சரியான திட்டமிடல் இல்லாதது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் .பணம் இல்லை என்றால் அமெரிக்கா உதவாது .என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்க [படுகிறது .பாவம் நம்பியவர்கள் கதி .
Rate this:
Cancel
Indian - kailasapuram,இந்தியா
22-ஆக-202119:48:38 IST Report Abuse
Indian எல்லோரும் ஆப்கானிஸ்தானை விட்டு பொய் விட்டால் அங்கு தலிபான் மட்டுமே இருப்பர் ...
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
22-ஆக-202107:57:10 IST Report Abuse
ganesha இது முற்கால சிந்தனையாக இருந்தாலும், இப்ப நடக்கும் பல விஷயங்களுக்கு இது ஒரு முக்கியமான காரியமாக இருக்கு. ஒருவிதத்தில் நான் இந்த சிந்தனையை சரி என்று சொல்வேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X